சர்வதேச அளவில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளிலும் பணவீக்கம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக சமீப நாட்களாக பல நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் மத்திய வங்கியும் இன்று அதன் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.
13 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்
இந்த வட்டி விகிதமானது 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் என்றும் கூறப்படுகின்றது. நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இங்கிலாந்து பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக மக்களின் செலவினங்களில் நெருக்கடியினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உச்சத்தில் பணவீக்கம்
இது கால் புள்ளிகள் அதிகரித்து 1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது பணவீக்கமானது 10 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இங்கிலாந்து அரசு ரெசசனை எதிர்கொள்ளலாம் என்று எச்சரித்திருந்த நிலையில், பேங்க் ஆப் இங்கிலாந்து இத்தகைய முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2009-க்கு பிறகு அதிரடி முடிவு
பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பாலிசிமேக்கர்கள், 1 சதவீதமாக வட்டி விகிதத்தினை அதிகரிக்க 6 - 3 என்ற கணக்கில் வாக்களித்துள்ளனர். இதற்கிடையில் தான் 2009ல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடிக்கு பிறகு 1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாலிசிமேக்கர்களில் சிறுபகுதியினர் மட்டுமே 1.25 சதவீதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இறுதியில் 1 சதவீதமாக வட்டி அதிகரிப்புக்கு ஆதரவு அதிகமிருந்த நிலையில், வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
சோதனையான காலம்
இதற்கிடையில் இனி அடுத்து வரும் கூட்டங்களிலும் வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு சோதனையான காலமாக கருதப்பட்டது.
உக்ரைன் பிரச்சனை
உலகின் முன்னணி பொருளாதாரங்கள் பணவீக்கத்தினை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா 50 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகரித்துள்ளது. இதே இந்தியா 40 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது. கொரோனாவின் பிடியில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் , உக்ரைன் ரஷ்யா பிரச்சனையால் அதிகளவிலான எரிபொருள் விலையினை எதிர்கொண்டுள்ளது. இது பணவீக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.


Click it and Unblock the Notifications