கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா நினைத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தவும் முடியும், குறைக்கவும் முடியும்.
OPEC அமைப்புகளில் இருக்கும் நாடுகளுடனும் ரஷ்யா உடனும் செய்யப்பட்ட முக்கியமான உடனபடுக்கை மூலம் இவ்வமைப்பில் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகளவில் குறைத்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே அதன் விலை கிடுகிடுவென உயரத் துவங்கியது.
உற்பத்தி அதிகரிப்பு
சவுதி அரபியா அரசு தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
5% சரிவு
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்றால், விலை குறைய வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதற்காகன முடிவுகளை மத்திய அரச கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் கையில் உள்ளது.
WTI கச்சா எண்ணெய்
இன்றைய வர்த்தகத்தில் (16.30GMT) WTI கச்சா எண்ணெய் 3.03 டாலர் அதாவது 4.4 சதவீதம் வரையில் குறைந்து 66.14 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
பிரென்ட் கச்சா எண்ணெய்
இதேபோல் இந்தியா அதிகம் வாங்கும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 4.8 சதவீதம் அதாவது 3.81 டாலர் குறைந்து 76.02 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
முதலீடுகள் சரிவு
இந்த அதிரடி விலை குறைவால் கச்சா எண்ணெய் சந்தையில் முதலீடுகள் அதிகளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications