கணவனுக்காக கள்ள உறவு..? ஆலீஸ் ஹுவாங் - ஜென்சன் ஹுவாங் உறவுக்கு பின்னால் கணவனின் டேட்டா சென்டர் சாம்ராஜ்ஜியம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் சீன பெண் உளவாளியான ஆலீஸ் ஹுவாங் உடனான கள்ள உறவு குறித்தும், ஆலீஸ் ஹுவாங் தலைமை வகித்த சிங்கப்பூர் மெகாஸ்பீட் நிறுவனத்துடன் என்விடியா செய்த மறைமுக வர்த்தக குறித்தும் கடந்த 2 வாரமாக உலகம் முழுவதும் பேசி வரும் வேளையில், தற்போது ஆலீஸ் ஹுவாங்-ன் கணவரின் தொடர்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

என்விடியாவில் இருந்து வாங்கப்படும் சிப் எங்கே செல்கிறது, இதனால் யார் பலன் அடைகிறார்கள், எப்படி இந்த என்விடியா சிப் வர்த்தகத்தில் சீன அரசின் பங்கு வகிக்கிறது என்பது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மிகப்பெரிய ஆய்வை செய்துள்ளது.

கணவனுக்காக கள்ள உறவு..? ஆலீஸ் ஹுவாங் - ஜென்சன் ஹுவாங் உறவுக்கு பின்னால் கணவனின் டேட்டா சென்டர் சாம்ராஜ்ஜியம்!

ஜென்சன் ஹுவாங் - ஆலீஸ் ஹுவாங் உறவு

இந்த ஆய்வின் மையப்புள்ளியாக இருக்கும் நபர் Kang Wei. ஜென்சன் ஹுவாங் உடன் கள்ள தொடர்பில் இருந்த ஆலிஸ் ஹுவாங்-ன் கணவர் தான் இந்த Kang Wei. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் காங் வெய் மூலமாகவே ஆலிஸ் ஹுவாங், ஜென்சனுக்கு அறிமுகமாகியுள்ளார்.

என்விடியாவின் ஆஸ்தான வர்த்தகமான வீடியோ கேம் துறை வர்த்தகம் வாயிலாக கடந்த 10 வருடங்களாக ஜென்சனுக்கும், காங் வெய்-க்கும் நட்பு இருந்து வந்து, இந்த நட்பின் வாயிலாக ஆலீஸ்-க்கு ஜென்சன் அறிமுகம் கிடைத்து பின்னாளில் கள்ள உறவாக மாறியுள்ளது. மேலும் இந்த கள்ள உறவின் வாயிலாக பெரியளவில் பலன் அடைந்துள்ளது ஆலீஸ் ஹுவாங்-ன் கணவர் Kang Wei தான்.

டேட்டா சென்டர் சாம்ராஜ்ஜியம்

Kang Wei சீன அரசின் முதலீட்டுடன் இயங்கும் 9 பில்லியன் டாலர் மதிப்பிலான டேட்டா சென்டர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் சீன அரசு பல்வேறு மெகா திட்டங்களை செயல்படுத்தியுள்ள வேளையில் இதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், ஆலீஸ் ஹுவாங் தலைமை வகித்த மெகாஸ்பீட் நிறுவனத்தின் வாயிலாக என்விடியா சிப் மற்றும் சிப் தொழில்நுட்பம் கைமாற்றியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு சீனாவுக்கு ஏஐ சிப், செமிகண்டக்டர் சிப் தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனங்கள் வழங்கக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் ஆலீஸ் ஹுவாங்-ன் சிங்கப்பூர் மெகாஸ்பீட் நிறுவனத்தின் வாயிலாகப் பெறப்பட்டு உள்ளது. இதற்கு ஆலீஸ் ஹுவாங்-ன் ஜென்சன் உடனான கள்ள உறவு உதவியுள்ளது என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

சீனாவின் தலையீடு

Kang Wei தலைமை வகித்த டேட்டா சென்டர் நிறுவனத்தில் சீன அரசு 10 சதவீத பங்குகளையும், Kang Wei-வின் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான Kang's Hexi Capital 27 சதவீத பங்குகளையும், மீதமுள்ள 63 சதவீத பங்குகளை Century Huatong நிறுவனம் வைத்துள்ளது.

இந்த முதலீட்டின் வாயிலாகவும், என்விடியாவுடன் இருக்கும் தொடர்பு காரணமாகவும் Century Huatong நிறுவனத்தின் தலைவராக Kang Wei நியமிக்கப்படுகிறார். இந்த ஒரு பதவி தான் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.

2022ஆம் ஆண்டு காங் வெய் தலைமையில் Century Huatong நிறுவனம், சீனாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான ஹூவாய் உடன் மாபெரும் கிளவுட் டேட்டா சென்டர் திட்டத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒரு ஒப்பந்தம் மூலம் ஹூவாய் மீது அமெரிக்க அரசு விதித்த தொழில்நுட்ப தடை மொத்தமாகக் களையப்பட்டது.

இதைத் தொடர்ந்து Wuhu என்னும் பகுதியில் 4.5 பில்லியன் டாலர் முதலீட்டில் intelligent-computing industrial park அமைக்கும் திட்டத்தை காங் வெய் தலைமையிலான நிறுவனம் கைப்பற்றியது. இத்திட்டத்தில் 8 டேட்டா சென்டர் அமைக்கப்பட்டது. இத்திட்டம் சீன அரசின் East Data, West Computing கொள்கையின் கீழ் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது.

இதன் பின்பு ஜூலை 2024ல் காங் வெய் 5 பில்லியன் டாலர் முதலீட்டில் சின்சுவான் மாகாணத்தில் மாபெரும் டேட்டா சென்டர் அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்தார் காங் வெய். இத்திட்டத்தை அறிவித்த பின்பு Century Huatong நிறுவனத்தின் டேட்டா வர்த்தக பிரிவின் தலைவராக அறிவிக்கப்பட்டார் காங் வெய்.

என்விடியா சிப்களை சீனாவுக்கு கொண்டு செல்ல உதவிய மெகாஸ்பீட்

இந்த அனைத்து திட்டத்திற்கும் தேவையான சிப்களை வாங்குவதில் காங் வெய் மனைவி ஆலீஸ் ஹூவாங் தலைமையிலான மெகாஸ்பீட் வங்கி பின்பு அதை சீனாவுக்கு திருப்பிவிடும் பணிகளை செய்தார். மேலும் என்விடியாவின் முக்கிய வர்த்தக பார்ட்னராகவும் மெகாஸ்பீட் அறிவிக்கப்பட்டது.

இவை அனைத்தும் 2021 - 2024ஆம் ஆண்டுக்குள் நடந்துள்ளது. 2025ல் ஜென்சன் ஹுவாங் மற்றும் ஆலீஸ் ஹுவாங் உடனான கள்ள உறவு வெளிச்சத்திற்கு வரவே, ஆலீஸ் ஹுவாங் முக்கிய பொறுப்புகளில் இருந்து வெளியேறினார். இதற்கிடையில் தான் சீன பாதுகாப்பு அமைப்புக்கு ஆலீஸ் ஹுவாங் பல்வேறு ரகசிய தரவுகளை ஜென்சன் வாயிலாக பகிர்ந்துள்ளதாக அமெரிக்க குற்றம்சாட்டி தற்போது விசாரணை துவங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+