ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு புதிதாக வரி விதிப்புத் திட்டத்தை அமலாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது, இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் பிற நாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்படுவதால், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் கவலையில் உள்ளது.
கொரோனா பாதிப்பால் கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் அமெரிக்க அரசு பல வளர்ச்சி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்களுக்கான நிதியை திரட்ட பல புதிய வழிகளைக் கையாண்டு வருகிறது.
இதன் வாயிலாக அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மீது புதிய வரி விதிக்கப் பைடன் அரசு முடிவு செய்துள்ளது.
28 சதவீத வரி
உலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் குறைந்தபட்சம் 28 சதவீத வரியை பிற நாடுகளில் செலுத்தாத பட்சத்தில், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் அந்த அமெரிக்க நிறுவனம் அல்லது வெளிநாட்டு நிறுவனம் அல்லது பன்னாட்டு நிறுவனம் மீது கூடுதல் உள்நாட்டு வரி விதிக்க ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டம் தீட்டி வருகிறது.
அமெரிக்காவின் முடிவு
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவின் புதிய வரி விதிப்பு முறை பாதித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி துறையை மேம்படுத்த புதிய முதலீடுகளைப் பெறும் முயற்சியில் 2019ல் புதிய வரிக் கொள்கை அறிவித்தது. அமெரிக்க அரசின் இந்த பரிந்துரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2019 வரிச் சலுகை திட்டம்
2019ல் மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கும் நிறுவனங்களுக்குச் சலுகை திட்டத்தின் வாயிலாக 15 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.
இந்தியா வருகை
இந்த அறிவிப்பால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் அமெரிக்க அரசு தற்போது செய்துள்ள கூடுதல் வரி பரிந்துரை புதிதாக வந்துள்ள நிறுவனங்களைப் பாதிக்கும்.
வரித் துறை அதிகாரிகள்
இந்தியாவில் 15 சதவீதம் வரி இருக்கும் காரணத்தால் அமெரிக்காவின் பெரும் மற்றும் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவிலோ அல்லது பிற நாடுகளிலோ உற்பத்தி தொழிற்சாலை அமைத்திருக்கும், அல்லது அமைக்கத் திட்டமிட்டு இருக்கும், இதனாலேயே அமெரிக்க அரசு கூடுதல் வரி என்ற புதிய திட்டத்தை அமலாக்கம் செய்துள்ளது என வரித் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அமேசானின் சென்னை தொழிற்சாலை
மேலும் அமெரிக்க அரசு இந்தக் கூடுதல் வரியை எப்படி விதிக்கும் என்று முழுமையாகத் தகவலை வெளியிடவில்லை. மேலும் ஜோ பைடன் அரசின் இந்த பரிந்துரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே நடை முறைக்கு வரும். சமீபத்தில் அமேசான் சென்னையில் புதிய உற்பத்தி தளத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி - ஏற்றுமதி கனவுகள்
இப்புதிய வரியால் ஏற்கனவே இந்தியாவில் வரிச் சலுக்கை பெற்று வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், புதிதாக வரிச் சலுகை பெற்று உற்பத்தியை துவங்கும் நிறுவனங்களையும் பாதிக்கும். அமெரிக்காவின் இந்த முடிவு இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கனவுகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications