சீன அதிபர் ஜி ஜின்பிங், 2017 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா வந்தார், ஜி ஜின்பிங்-ன் அமெரிக்க வருகைக்கு முக்கியமான காரணம் சான் பிரான்சிஸ்கோ-வில் நடக்கும் APEC கூட்டம் தான். இதற்காகக் கலிபோர்னியா நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
புதன்கிழமை APEC உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன், சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா பகுதியில் ஒரு ரகசிய இடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ம் முக்கியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் எனப் பல பெரும் தலைகளுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்துக்காக அமெரிக்க அரசு சார்பில் மிகவும் காஸ்ட்லியான உணவு தயாரிக்கப்பட உள்ளது, ஒரு பிளேட் டின்னர் விலை மட்டும் 2000 டாலர் எனத் தெரிகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் புதன்கிழமையன்று நடந்த ரகசிய சந்திப்புக்குப் பின்பு இரு நாடுகளின் அதிபர்களின் ஹாட்லைனைத் திறக்கவும், இரு நாட்டு ராணுவங்களும் மீண்டும் தொடர்புகளைத் தொடங்கவும், ஃபெண்டானில் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர் என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்று ஜி ஜின்பிங் - ஜோ பைடன் முதல் முறையாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஜி ஜின்பிங் - ஜோ பைடன் மத்தியிலான ரகசிய சந்திப்பு சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது.

இதில் அமெரிக்க-சீன உறவுகளில் சீர்குலைத்துள்ள பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டதாக, குறிப்பாகத் தைவான் பிரச்சனை குறித்துப் பேசப்பட்டு உள்ளது எனவும் ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை 30வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின் போது அமெரிக்க-சீனா உறவுகளுக்கான தேசிய குழு மற்றும் அமெரிக்க-சீனா வர்த்தகக் கவுன்சில் வழங்கும் இரவு விருந்தானது நடைபெற்றது.
இந்த விருந்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில் அமெரிக்காவின் பங்குதாரராகவும் நண்பராகவும் இருக்கச் சீனா தயாராக உள்ளது, இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஏராளமான இடங்கள் உள்ளன என்று புதன்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க நிறுவனத் தலைவர்கள் முன்னிலையில் பேசினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுக்கு ஒட்டுமொத்த கூட்டமும் எழுந்து நின்று கைதட்டியது. சுமார் 400 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் டிம் குக், எலோன் மஸ்க், பிளாக்ராக் CEO லாரி ஃபிங்க், பிளாக்ஸ்டோன் CEO ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன், VISA CEO ரியான் மெக்கினெர்னி, குவால்காம் CEO கிறிஸ்டியானோ அமோன், பிராட்காம் CEO ஹாக் டான், பிரிட்ஜ் வாட்டர் அசோசியேட், பைசர் நிறுவன CEO-க்களும் கலந்துகொண்டனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications