அமெரிக்கா சீனாவிற்கும் இடையில் வர்த்தகப் போர் வெடித்துக்கொண்டு இருக்கும் நிலையில், அமெரிக்கா-ஐரோப்பா இடையே பணிப்போர் நிலவி வருகிறது. இதனால் ஐரோப்பாவில் அதிகம் வர்த்தகம் வைத்துள்ள அமெரிக்கா நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை சந்தித்து வருகிறது.
ஹார்லி டேவிட்சன்
இருசக்கர வாகன நிறுவனங்களில் ராஜாவாக இருக்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் அமெரிக்க-ஐரோப்பிய வர்த்தகப் பிரச்சனையில் சிக்கித்தவித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஹார்லி டேவிட்சன் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
முக்கிய முடிவு
இரு நாடுகள் மத்தியில் இருக்கும் பிரச்சனை தற்போது தீர்க்க முடியாமல் இருக்கும் நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது உற்பத்தி பணிகளை அமெரிக்காவிற்கு வெளியில், அதாவது ஐரோப்பாவிற்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய சந்தை
இதன் மூலம் ஹார்லி டேவிட்சன் உற்பத்தியை அதிகரிப்பது மட்டும் அல்லாமல், தனது ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் குறைந்த விலையில் பைக்குகளை விற்பனை செய்ய முடியும் என ஹார்லி டேவிட்சன் நிர்வாகம் நம்புகிறது.
தாய்லாந்து
அமெரிக்காவில் தற்போது உருவாகியுள்ள பிரச்சனையின் காரணமாக ஹார்லி டேவிட்சன் ஏற்கனவே Missouri பகுதியில் இருக்கும் தொழிற்சாலையை மூடிவிட்டு, தாய்லாந்து நாட்டில் புதிய தொழிற்சாலையைத் துவங்க உள்ளதாக அறிவித்த நிலையில், தற்போது ஐரோப்பிய தொழிற்சாலை டிரம்ப் அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா
இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்து வரும் நிலையில், இந்நிறுவனம் தாய்லாந்து மற்றும் ஐரோப்பாவில் உற்பத்தியைத் துவங்குவதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்குக் குறைவான விலையில் ஹார்லி பைக்குகள் கிடைக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.
பங்குகள்
இதன் எதிரொலியாகக் கடந்த 5 மாதத்தில் இல்லாத வகையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனப் பங்குகள் 6 சதவீதம் சரிந்து 41.57 டாலருக்கு இந்நிறுவனப் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் மட்டும் ஹார்லி டேவிட்சன் நிறுவனப் பங்குகள் சுமார் 18 சதவீதம் சரிவடைந்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications