சவுதி அரேபியா தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் அலி அல் கபீஸ், அடுத்த ஹிஜ்ரி (Hijri) ஆண்டின் துவக்கத்தில் இருந்து 12 துறைகளில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பணிபுரிய அல்லது தொழில் செய்யத் தடை விதிப்பதாக இந்த அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மக்களுக்கு
இது இந்தியர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சவுதி அரசாணையின் படி, உள்நாட்டு மக்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
30 லட்சம் இந்தியர்கள்
தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கலெத் அபா அலி கயில் கூறுகையில், இந்த முடிவு ஏற்கெனவே சவுதி மக்களுக்குத் தடைசெய்யப்பட்ட வேலைகளுக்காகப் பல்வேறு பகுதி அரசுகளின் ஒப்பந்தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.
இந்த முடிவின் மூலம் சவுதியில் பணிபுரியும் 30லட்சம் இந்தியர்கள் உள்பட 12 மில்லியன் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாதிப்படைவர். இந்த முடிவு படிப்படியாக அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
வெளிநாட்டவருக்குத் தடைசெய்யப்பட்ட 12 வேலைகள் பின்வருமாறு.
கடிகாரக் கடைகள், கண்ணாடிக் கடைகள், மருத்துவ உபகரணக் கடைகள், மின்னணு மற்றும் மின்னியல் சாதன கடைகள், கார் உதிரபாகங்கள் விற்கும் கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், தரைவிரிப்பான்கள் விற்கும் கடைகள், ஆட்டோமொபைல் மற்றும் மொபைல் கடைகள், வீடு மற்றும் அலுவலக உபயோகப்பொருட்களின் கடைகள், ரெடிமேட் ஆடையகங்கள், குழந்தைகள் மற்றும் ஆடவர் துணிக்கடைகள், வீட்டு பாத்திரக்கடைகள் மற்றும் பேக்கரிகள்
செப்டம்பர் 11,2018 முதல் வெளிநாட்டவர்களைப் பணிக்கு எடுக்கத் தடை செய்யப்பட்ட துறைகள்
- கார் மற்றும் இருசக்கர வாகன காட்சியகங்கள்
- ரெடிமேட் ஆடையகங்கள்
- வீடு மற்றும் அலுவலக உபயோகப்பொருட்களின் கடைகள்
- சமையலறை மற்றும் வீட்டு உபகரணக் கடைகள்
பின்வரும் துறைகளில் நவம்பர் 9 ,2018 முதல் வெளிநாட்டவர்களைப் பணிக்கு எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- மின்னணு சாதன கடைகள்
-கடிகாரக் கடைகள்
- கண்ணாடிக் கடைகள்
பின்வரும் துறைகளில் ஜனவரி 7 ,2019 முதல் வெளிநாட்டவர்களைப் பணிக்கு எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடைகள்
- கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
- தரைவிரிப்பான்கள் விற்கும் கடைகள்
-வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் கடைகள்
- இனிப்புக் கடைகள்
பொருளாதாரச் சீர்திருத்தம்
2020க்குள் சவுதி மக்களுக்கு வேலைவாய்பின்மையைக் குறைக்கும் வகையில் கடந்த ஆண்டுக் கொண்டு வரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்தப் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்து இந்தியாவின் 4வது பெரிய வர்த்தகம் செய்யும் நாடாகச் சவுதி உள்ளது. இந்தியாவின் 5ல்1 பங்கு கச்சா எண்ணெய் தேவை பூர்த்திச் செய்து, முக்கிய எண்ணெய் ஆதாரமாகச் சவுதி திகழ்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications