டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதல் பல மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடுமையான குடியேற்ற கொள்கைகளையும் அமல்படுத்தியுள்ளார். இதனால் இந்தியர்கள் உட்பட 1000 கணக்கான புலம்பெயர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் இயங்கி வரும் கூகுள் மற்றும் அமேசான் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் H-1B வைத்திருக்கும் ஊழியர்கள் அமெரிக்க மண்ணை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.

முக்கியமாக இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறினால் மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்களோ? என்ற அச்சத்தில் உள்ளனர். டொனால்ட் டிரம்பின் முந்தைய நிர்வாகத்தின் போதும் இதேபோன்று குடிவரவு விதிகள் கடுமையாக்கப்பட்டன. அப்போது முறையான விசா வைத்திருந்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாமல் சிக்கித் தவித்தனர். இந்த அனுபவங்களின் அடிப்படையில் தற்போது உள்ள சூழ்நிலையிலும் அதே போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
H-1B விசா என்பது அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிய வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க உதவும் தற்காலிக விசா. இந்த விசாவை வைத்திருப்பவர்கள். அமெரிக்காவில் சில காலம் பணி புரிய அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் விடுமுறைக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அமெரிக்காவை விட்டு வெளியேறினால் மீண்டும் அமெரிக்கா திரும்பும் போது அப்போதைய குடிவரவு கொள்கைகள் என்னென்ன? மற்றும் அப்போதைய அதிபரின் முடிவு என்னென்ன? என்பதைப் பொறுத்துதான் முடிவுகள் எடுக்கப்படும். ட்ரம்ப் நிர்வாகத்தில் கடுமையான குடிவரவு கொள்கைகள் இருப்பதால் முறையான ஆவணங்கள் இருந்தும் கூட சிலர் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 65,000 H-1B விசாக்கள் லாட்டரி முறையில் வழங்கப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் விசாக்களைப் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து சீன, கனேடிய நாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த பெரும்பாலான நபர்கள் மைக்ரோசாப்ட், கூகுள், உபர் மற்றும் சிப் நிறுவனமான என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். ஆனால் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளின் கீழ், புலம்பெயர்ந்தோரின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. தொழில்நுட்பத் துறையில் இருந்து புலம்பெயர்ந்தோரை குறைப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டியில் சீனாவுடன் போட்டியிடும் அமெரிக்காவின் திறனை குறைக்க கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதில் இவ்விரு நாடுகளும் தான் போட்டி போடுகின்றன.
அமெரிக்காவில் உள்ள அனைத்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களோடு ஒப்பிடும்போது அமேசான் அதிக அளவில் விசாக்களை வழங்கியுள்ளது. அதை தொடர்ந்து கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் ஆகியவை உள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications