பில் கேட்ஸ் மகளை காதலித்து திருமணம் செய்த நாசர்.. யார் இவர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் சமீபத்தில் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் அவருடைய மகளின் திருமனம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அவருக்கு அளித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் பில் கேட்ஸ் அவருடைய மனைவி மெலிண்டா-வை விவாகரத்துச் செய்தார்.

 

பல கோடி இளைஞர்களின் கனவாக இருந்த பில் கேட்ஸ் மகளை எகிப்து நாட்டைச் சேர்ந்த நாசர் பல ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்துள்ளார்.

சரி யார் இந்த நாசர்..? கேள்விப்படாத பெயர், பிரபலமில்லாத முகம்..!

NRI கணக்கில் இருந்து பணம் திருட முயற்சி.. 3 ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் கைது..!

பில் கேட்ஸ் மகள்

பில் கேட்ஸ் மகள்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ்-ன் மூத்த மகளான ஜெனிபர் கேட்ஸ் நியூயார்க் நகரத்தில் இருக்கும் ஜெனிபர் சொந்தமாக வைத்திருக்கும் 124 ஏக்கர் குதிரை பண்ணையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நாயல் நாசர் (Nayel Nassar) திருமணம் செய்துள்ளார்.

ஜெனிபர் கேட்ஸ்

ஜெனிபர் கேட்ஸ்

இந்த 124 ஏக்கர் குதிரை பண்ணையைப் பில்கேட்ஸ் 2018ல் ஜெனிபர் கேட்ஸ்-க்கு வாங்கிக் கொடுத்தார், இந்தப் பண்ணையில் மொத்த மதிப்பு 15.82 மில்லியன் டாலர். சரி யார் இந்த நாசர்..? அதிகம் கேள்விப்படாத பெயராக உள்ளது, இதேபோல் பிரபலமில்லாத முகமாகவும் உள்ளது.

நாயல் நாசர்
 

நாயல் நாசர்

எகிப்து நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்த நாயல் நாசர் சிகாகோவில் பிறந்து குவைத் நாட்டில் வளர்ந்தார். இளம் வயதில் இருந்து குதிரையில் பயணம் செய்வதில் ஆர்வமாக இருந்த நிலையில் 30 வயதான நாயல் நாசர் equestrian விளையாட்டில் முன்னணி வீரர் ஆகத் திகழ்கிறார். சொல்லப்போனால் ஜெனிபர் கேட்ஸ்-ஐ நாயல் நாசர் சந்தித்ததே equestrian விளையாட்டின் போது தான்.

ஹார்வார்டு பல்கலைக்கழகம்

ஹார்வார்டு பல்கலைக்கழகம்

2013ஆம் ஆண்டு நாயல் நாசர் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எக்னாமிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற நிலையில், இதே பல்கலைக்கழகத்தில் 2018ல் Human Biology பிரிவில் ஜெனிபர் கேட்ஸ் பட்டம் பெற்றார். படிப்பு வேறு வேறாக இருந்தாலும் இருவருக்கும் equestrian விளையாட்டு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது.

equestrian விளையாட்டு

equestrian விளையாட்டு

equestrian விளையாட்டில் நாயல் நாசர் 2013, 2014 மற்றும் 2017ல் உலகக் கோப்பை போட்டியில் தேர்வானார். சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டார் நாயல் நாசர். 61 வருடத்தில் முறையாக ஒரு எகிப்து அணி equestrian விளையாட்டில் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.

குதிரை பண்ணை

குதிரை பண்ணை

நாயல் நாசர் விளையாட்டில் மட்டும் அல்லாமல் வர்த்தகத்திலும் உள்ளார். 2014ல் கலிபோர்னியாவில் Nassar Stables LLC என்ற நிறுவனத்தை உருவாக்கி இயங்கி வருகிறார். இதேபோல் ஜெனிபர் கேட்ஸ்-ம் எவர்கேட் ஸ்டேபிள்ஸ் என்ற நிறுவனத்தையும் உருவாக்கினர்.

திருமணம்

திருமணம்

25 வயதான ஜெனிபர் கேட்ஸ் மற்றும் 30 வயதான நாயல் நாசர் இருவரும் முதலில் இஸ்லாம் முறையிலும், அதன் பின்பு கிருத்துவ முறைப்படி என இரு முறை திருமணம் செய்துள்ளனர். இருவரின் திருமணம் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bill gates daughter Jennifer Gates married Egyptian Olympic star Nayel Nassar

Bill gates daughter Jennifer Gates married Egyptian Olympic star Nayel Nassar
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X