மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸ் - நயெல் நாசர் தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றிய தகவலை ஜெனிஃபர் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருக்கிறார்.
பிறந்த பச்சிளங்குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா கணக்கில் பதிவிட்டு உள்ளார். அதில் குழந்தையின் முகம் மறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பதிவுக்கு, "எங்களின் சிறிய ஆரோக்கியமான குடும்பத்தில் இருந்து அன்பை அனுப்புகிறோம்." என கேப்ஷனுடன் தனது குழந்தையின் புகைப்பட்டத்தை பதிவிட்டார்.
2022 ஆம் ஆண்டு இறுதி பதிவில் பில் கேட்ஸ் தான் தாத்தா ஆக போகும் விஷயத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.
பில் கேட்ஸ்
இதே புகைப்படத்தை பில் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, வாழ்த்துக்கள் ஜென் மற்றும் நயெல். நான் மிகவும் பெருமை உடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மெலிண்டா ஃபிரென்ச் கேட்ஸ்
புதிதாக பாட்டி ஆகி இருக்கும் மெலிண்டா ஃபிரென்ச் கேட்ஸ், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். "இந்த உலகிற்கு வரவேற்கிறேன். எனது மனம் பரவசமடைகிறது," என்று அவர் தனது மகளின் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்.
ஜெனிஃபர் மற்றும் நயெல் நாசர்
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதியின் மூத்த மகள் ஜெனிஃபர் மற்றும் நயெல் நாசர் இடையே 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் நியூ யார்க்கின் வெஸ்ட்செஸ்டரில் உள்ள இல்லத்திலேயே நடத்தப்பட்டது.
சீமந்த புகைப்படங்கள்
டிசம்பர் 2022, ஜெனிஃர் கேட்ஸ் தனக்கு நடத்தப்பட்ட சீமந்த புகைப்படங்களை பகிர்ந்து, தாங்கள் பெண் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருந்தார். இன்ஸ்டாகிராமில் இது குறித்த பதிவில், "சீமந்தத்திற்கு பின் இன்னமும் மகிழ்ச்சியில் மிதக்கிறேன். நேரில் வந்தும், தொலைவில் இருந்தும் எனக்கு, என் மகளுக்கு பாசத்தை கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த மறக்க முடியாத மாலை பொழுதை ஏற்படுத்தி கொடுத்த மெலிண்டா ஃபிரென்ச் கேட்ஸ்-க்கு நன்றி. எங்களின் மனம் நிறைந்துள்ளது," என குறிப்பிட்டு இருந்தார்.
தாத்தா ஆக போகிறேன்
இந்த செய்திக்கு கருத்து தெரிவித்த பில் கேட்ஸ், "எனது மூத்த மகள் நான் அடுத்த ஆண்டு தாத்தா ஆக போகிறேன் என்ற செய்தியை சொன்னதில் இருந்து புதிய லென்ஸ் மூலம் உலகை பார்க்க துவங்கி இருக்கிறேன். " என தெரிவித்துள்ளார்.
சிறப்பான சூழல்
மேலும், "நான் தாத்தா ஆக போகிறேன், என டைப் செய்யும் போது எனது மனம் உணர்ச்சிவயப்படுகிறது. மேலும் எனக்கு இந்த எண்ணம் புதிய அனுபவத்தை உணர செய்கிறது. எனது பேரக்குழந்தை பிறக்க இருக்கும் உலகை பற்றி நினைக்கும் போது, எல்லோருடைய குழந்தை மற்றும் பேரக்குழந்தைகள் வாழ்வதற்கு சிறப்பான சூழலை உருவாக்க உதவ வேண்டும் என்ற ஊக்கம் அதிகரிக்கிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஜெனிபர் கேட்ஸ்
பில் கேட்ஸ்-ன் மூத்த மகளான ஜெனிபர் கேட்ஸ் 2021ல் நியூயார்க் நகரத்தில் இருக்கும் ஜெனிபர்-க்கு சொந்தமான 124 ஏக்கர் குதிரை பண்ணையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நாயல் நாசர் (Nayel Nassar) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
யார் இந்த நாயல் நாசர்
எகிப்து நாட்டு வம்சாவளியை சேர்ந்தவரும், சிகாகோவில் பிறந்து குவைத் நாட்டில் வளர்ந்தார் Nayel Nassar, 31 வயதான நாயல் நாசர் equestrian விளையாட்டில் முன்னணி வீரர் ஆகத் திகழ்கிறார். இருவரும் பல வருடம் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது ஜெனிபர் கேட்ஸ் - Nayel Nassar ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications