பில் கேட்ஸ் விவாகரத்து: 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை பெற்ற மெலிண்டா கேட்ஸ்..!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவருமான பில் கேட்ஸ், சுமார் 27 வருடத்திற்குப் பின் தனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்ய முடிவு செய்துள்ள செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இணைந்து சுகாதாரம், ஏழை நாடுகளில் இருக்கும் மக்களின் உடல் நலம், மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல பணிகளைத் தங்களது பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் வாயிலாகச் செய்து வரும் காரணத்தால் இந்த ஜோடி டெக் உலகில் மட்டும் அல்லாமல் பிற துறைகளிலும் மிகவும் பிரபலமாக விளங்கி வருகின்றனர்.

பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ்

பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ்

பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தங்களது 27 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ள நிலையில், பில் கேட்ஸ்யிடம் இருந்து மெலிண்டா மிகப்பெரிய தொகையை ஜீவனாம்சமாகப் பெறுவார் என அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்நோக்கி வரும் நிலையில் இதற்கான பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளார் பில்கேட்ஸ்.

கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம்

கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம்

விவாகரத்து அறிவிப்பு வெளியான நாளில் இருந்து பில் கேட்ஸ் தனது சொந்த முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் வாயிலாக முதலீடு செய்திருந்த பல பங்குகளைப் பில் கேட்ஸ், மெலிண்டாவிற்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.

முக்கிய நிறுவன பங்குகள் பரிமாற்றம்

முக்கிய நிறுவன பங்குகள் பரிமாற்றம்

இதில் முக்கியமான டீயர் அண்ட் கோ, கோகோ கோலா FEMSA, கனடா ரயில்வே, ஆட்டோ நேஷன் இன்க், குரூபோ டெலிவிசா போன்ற முக்கியமான நிறுவனங்களின் பங்குகளும் அடக்கம். பில் கேட்ஸ்-ன் கேஸ்கேட் இன்வெஸ்ட் நிறுவனத்திற்கு மைகெல் லார்சன் தலைமை வகிக்கித்து வருகிறார்.

52 பில்லியன் டாலர் மதிப்பீடு

52 பில்லியன் டாலர் மதிப்பீடு

வேல்யூ ஸ்டாக்ஸ், பிரைவேட் ஈக்விட்டி, எனர்ஜி, ஹாஸ்பிடாலிட்டி, வென்சர் கேப்பிடல் எனப் பல துறை சார்ந்த முதலீடுகள் நிறைந்துள்ள கேஸ்கேட் இன்வெஸ்ட் நிறுவனம் தற்போது 52 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை நிர்வாகம் செய்துள்ளது.

பில் கேட்ஸ் சொத்து மதிப்பு

பில் கேட்ஸ் சொத்து மதிப்பு

145 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கும் பில் கேட்ஸ் இதுவரை கேஸ்கேட் இன்வெஸ்ட் நிறுவனத்தில் இருந்து மட்டும் சுமார் 3 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பிலான பங்குகளை மெலிண்டா-வின் பெயருக்கு மாற்றியுள்ளார்.

2,42,000 ஏக்கர் நிலம்

2,42,000 ஏக்கர் நிலம்

இவை அனைத்திற்கும் தாண்டி சமீப காலமாகப் பில்கேட்ஸ் விவசாயத் துறையில் இறங்க முடிவு செய்து சத்தமே இல்லாமல் அமெரிக்காவில் பல பகுதிகளில் இருந்து சுமார் 2,42,000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் மிகப்பெரிய விவசாய நில உரிமையாளராக உயர்ந்துள்ளார்.

மெலிண்டா ஜீவனாம்சம்

மெலிண்டா ஜீவனாம்சம்

இதனால் மெலிண்டா, கேஸ்கேட் இன்வெஸ்ட் நிறுவனம் மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட், ரியல் எஸ்டேட், எனப் பல பிரிவுகளில் இருந்து மிகப்பெரிய தொகையை ஜீவனாம்சமாகப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் ஜெப் பைசோஸ்

அமேசான் ஜெப் பைசோஸ்

2019ஆம் ஆண்டில் அமேசான் தலைவர் ஜெப் பைசோஸ் தனது காதல் மனைவியான மெக்கென்சி-ஐ விவாகரத்து செய்த போது சுமார் 16 சதவீதம் அளவிலான் அமேசான் பங்குகளை ஜீவனாம்சமாகப் பெற்றார், எனவே மெலிண்டாவும் பெரும் தொகையைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+