மாஸ்கோ: ஜெர்மன் – அமெரிக்கரான கார்ல் எரிவான் ஹாப் (Karl-Erivan Haub), மிகப்பெரிய ரீடெய்ல் நிறுவனத்தை நடத்தி வந்தவர். டென்கல்மேன் என்ற குழுமத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை தந்த ஹாப், உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தவர்.
கடந்த 2018ஆம் ஆண்டு இவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இவர் உயிருடன் ரஷ்யாவில் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

கார்ல் எரிவான் ஹாப், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆல்ப்ஸ் மலையில் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தார். அப்போது அவர் மலையேற்றத்துக்கு சென்று திடீரென மாயமானார். அவர் மீண்டும் ரிசார்ட்டுக்கு திரும்பவில்லை.
எனவே ரிசார்ட் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆல்ப்ஸ் மலையில் அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆறு நாட்களாக ஐந்து ஹெலிகாப்டர்களை கொண்டு ஆல்ப்ஸ் மலையின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்றது. ஆனால் அவர் உயிருடன் இருப்பதற்கான அடையாளமோ அல்லது அவரது உடல் இருப்பதற்கான அடையாளமோ கிடைக்கவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு , இந்த வழக்கை முடித்து வைத்த ஜெர்மன் நீதிமன்றம் , ஹாப் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஆர்டிஎல் என்ற தொலைக்காட்சி நடத்திய ஆய்வில் ஹாப் தற்போது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இவர் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வெரோனிகா எருமிலோவா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் ஜெர்மனியை சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாப் மாயமாவதற்கு முன்பு மூன்று தினங்களில் வெரோனிகாவை 13 முறை தொடர்பு கொண்டு பேசி இருப்பது அவரது செல்போன் உரையாடல் விவரங்களை ஆய்வு செய்த போது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக இருவரும் நீண்ட நேரம் பேசியதும் கடைசியாக அவர்கள் பேசிய காலின் அளவானது ஒரு மணி நேரம் இருந்தது என்றும் விசாரணையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஹாப்பின் பயோமெட்ரிக் விவரங்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அவர் ரஷ்யாவில் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹாப் உயிரிழந்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டு ரஷ்யாவில் சென்று காதலி வெரோனிகாவுடன் வசித்து வருகிறார் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஜெர்மனி அரசும் விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 2018-இல் அவர் மாயமானதை அடுத்து அவரது 5.2 பில்லியன் யூரோ மதிப்பிலான ரீடெய்ல் நிறுவனம், அவரது சகோதரருக்கு சென்றது. தற்போது அவர் அந்த தொழில்களை கவனித்து வருகிறார். ஹாப்புக்கு ஏற்கனவே ஜெர்மனியில் ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அவர்களையும், சொத்தையும் விட்டுவிட்டு அவர் ரஷ்யாவில் காதலியுடன் வாழ்ந்து வருகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications