முதலீட்டு சந்தையில் தற்போது மாற்று முதலீடாகவும், எதிர்கால நிதி பரிமாற்றத்தின் புதிய நம்பிக்கையாக இருக்கும் கிரிப்டோகரன்சி சந்தையில் புதிய திருப்பமாக பாகிஸ்தான் அமைப்பு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்றால் மிகையில்லை.
பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய கிரிப்டோ சந்தை கட்டுப்பாட்டு அமைப்பாக இருக்கும் பாக். விர்ச்சுவல் அசர்ட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி அமைப்பு விர்ச்சுவல் கரன்சியாக கருதப்படும் கிரிப்டோகரன்சி தொடர்பான மத கோட்பாட்டை தெளிவுப்படுத்துமாறு அந்நாட்டின் உயரிய இஸ்லமிய மதக் கல்வி அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இதை தொடர்ந்து உலகின் முன்னணி இஸ்லாமிய மதகுருக்களில் ஒருவரான முஃப்தி முஹம்மது தாகி உஸ்மானி கொடுத்த விளக்கத்தில் ஷரியா சட்டத்தின் படி கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது என விளக்கம் கொடுத்தார்.
இதேபோல் இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி கிரிப்டோகரன்சி தற்போது செல்வமாக கருதப்படவில்லை என்றும் வெளிப்படியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கராச்சியில் இருக்கும் ஒரு மதக் கல்லூரி வெளியிட்ட ஜூன் மாத அறிக்கையில் பிட்காயன், எதிரியம், ஸ்டேபிள்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்வது ஷரியா சட்டத்தின் கீழ் ஹராம் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தான் பாக். விர்ச்சுவல் அசர்ட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி அமைப்பு விளக்கம் கேட்டு இதை தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்த விளக்கம் பாகிஸ்தான் நாட்டை தாண்டி தற்போது ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இஸ்லாமிய மதத்தின் படி ஷரியா சட்டம் மிகவும் கண்டிப்புடன் பின்பற்றப்படும் விஷயமாகும், அதிலும் குறிப்பாக நிதி விவகாரத்தில் மிகவும் கண்டிப்புடன் செயல்படும்.


Click it and Unblock the Notifications