சமூக வலைத்தளங்களில் அண்மைக் காலமாக வைரலாகப் பரவிவரும் பல பதிவுகள், பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தான் பிட்காயினை கண்டுபிடித்தவர் என்ற ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன. சதொஷி நாகமோட்டோ என்ற புனைப்பெயரில் பிட்காயினின் ஆசிரியர் தான் என எப்ஸ்டீன் உரிமை கோரியதாகக் கூறப்படும், மின்னஞ்சல் படங்கள் ஆன்லைனில் வலம் வந்ததே இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணம்.
அமெரிக்க பாலியல் குற்றவாளியும் ,மனித கடத்தலில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. உலகையே அதிர வைக்கும் புகைப்படங்களும், தகவல்களும் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு தகவலும் நம்மை கலங்கடிக்க வைக்கின்றன. சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பல்வேறு சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்ட படங்கள் இதில் வெளியாகியுள்ளன. பல்வேறு பிரபலங்களின் பெயர்களும் எப்ஸ்டீன் ஃபைல்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இந்நிலையில் , 2008 அக்டோபர் 31 அன்று எப்ஸ்டீன் தனது நீண்டகால உதவியாளர் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுக்கு அனுப்பியதாக கூறப்படும் ஒரு மின்னஞ்சலை போன்ற புகைப்படம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. X மற்றும் ரெடிட் போன்ற தளங்களில் பரவி வரும் இந்த மின்னஞ்சல், எப்ஸ்டீன் தான் சதொஷி என்ற புனைப்பெயருக்குப் பின்னால் இருப்பவர் என்றும், பிட்காயினை “உலகிற்குத் தயாராக உள்ள ஒரு சிறிய டிஜிட்டல் தங்கச் சுரங்கம்” என அவர் மின்னஞ்சலில் கூறியுள்ளார் என்றும் அதில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த சர்ச்சைக்குரிய மின்னஞ்சலில், "Ghislaine, the 'Satoshi' pseudonym is working perfectly. Our little digital gold mine is ready for the world. Funding secured," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு ஊடங்களும் இதனை ஆய்வு செய்து இது ஆதாரமற்றவை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் இந்த மின்னஞ்சல் இடம்பெறவில்லை என்பதை France24 ஊடகம் தெளிவாக கூறுகிறது. பிட்காயினை உருவாக்கிய சதொஷி நாகமோட்டோவின் அடையாளம் உலகிற்கு இன்னும் மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில் அது ஜெஃப்ரி எப்ஸ்டீன் தான் என பரவிய தகவல் போலியானது என தெரிய வந்துள்ளது. மின்னஞ்சலில் இரண்டு "To:" கோடுகள் இருந்தது போன்ற தெளிவான வடிவமைப்புப் பிழைகள் கண்டறியப்பட்டன. அமெரிக்க நீதித்துறையின் (DOJ) எப்ஸ்டீன் கோப்புகளின் அதிகாரப்பூர்வ ஆவணக் காப்பகத்தில் "சதொஷி" என்ற வார்த்தைக்கு 24 தேடல் முடிவுகள் இருந்தாலும், அவற்றில் எதுவுமே இணையத்தில் பரவும் இந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் ஆவணத்துடன் பொருந்தவில்லை.
மேலும், சர்ச்சைக்குரிய மின்னஞ்சலில் உள்ள "little digital gold mine" என்ற குறிப்பிட்ட சொற்றொடரும் DOJ காப்பகத்தில் தேடியபோது எந்தவித முடிவையும் தரவில்லை. மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டுள்ள ஐடி ([email protected]) எப்ஸ்டீன் கோப்புகளில் பொதுவாகக் காணப்படும் மின்னஞ்சல் ஐடியிலிருந்து ([email protected]) வேறுபட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த பல ஆதாரங்களின் அடிப்படையில், எப்ஸ்டீன் பிட்காயினை கண்டுபிடித்தார் என்ற தகவல் உண்மை இல்லை என்றும், அவர் சதொஷி நாகமோட்டோ அல்ல என்றும் திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications