கிரிப்டோகரன்சி இன்றைய டிஜிட்டல் வர்த்தக உலகில் அதிகம் விவாதிக்கப்படும் முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஒருபக்கம் உலகின் 2வது வல்லரசு நாடான சீனா கிரிப்டோ வர்த்தகத்தை மொத்தமாக மூடிவிட்டு டிஜிட்டல் யுவான் தயாரிப்பிலும், அதன் வர்த்தகத்திலும் கவனம் செலுத்திய வருகிறது.
மறுப்புறம் அமெரிக்கா உட்படப் பல தென் ஆசிய நாடுகள் கிரிப்டோ சந்தையில் ஆதரித்து வருகின்றனர். இந்த மாறுபட்ட சூழ்லில் முதலீட்டாளர்களும், சாமானிய மக்களுக்கும் கிரிப்டோகரன்சில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்பதில் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய சமுகவலைதள நிறுவனமான பேஸ்புக்-ஐ ஓரம்கட்டியுள்ளது பிட்காயின்.
பிட்காயின் விலை
சர்வதேச சந்தையில் பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்டோகரன்சி மீது கலவையான மனநிலை இருக்கும் வேளையிலும் பிட்காயின் மீது அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது. இதன் வாயிலாக இன்று ஒரு பிட்காயின் விலை அதிகப்படியாக 56,078 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
1 டிரில்லியன் டாலர்
இதன் மூலம் பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலரை அளவீட்டை தாண்டி முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதன் மூலம் அடுத்தச் சில நாட்களுக்குப் பிட்காயின் விலை தொடர்ந்து உயர்வது மட்டும் அல்லாமல் சந்தை மதிப்பில் புதிய உச்சத்தையும் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் நிறுவனம்
இதற்குப் பேஸ்புக் நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள். உலகிலேயே மிகப்பெரிய சமுக வலைதளம் மற்றும் டெக் நிறுவனமாக இருக்கும் பேஸ்புக்-ன் மொத்த சந்தை மதிப்பு 930 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில் பிட்காயின் 1 டிரில்லியன் டாலர் அளவிலான உயர்வை தொட்டு உள்ளது.
பேஸ்புக்-ஐ ஓரம்கட்டியுள்ளது பிட்காயின்
இதன் மூலம் பிட்காயின் சந்தை மதிப்பீட்டில் பேஸ்புக்-ஐ ஓரம்கட்டியுள்ளது. இதைத் தாண்டி பிட்காயின் முதலீட்டாளர்கள் தற்போது பேஸ்புக் முதலீட்டாளர்களுக்கு இணையாக உயர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை. நீங்களும் பிட்காயின் முதலீட்டாளர் என்றால் கமெண்ட் பண்ணுங்க.
கிரிப்டோகரன்சி விலை
முன்னணி கிரிப்டோகரன்சியின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் - 54,609 டாலர் (1.41 சதவீத உயர்வு), எதிரியம் - 3,642 டாலர் (2.21 சதவீத உயர்வு), ரிப்பிள் - 1.08 டாலர் (1.44 சதவீத உயர்வு), கார்டானோ - 2.28 டாலர் (0.32 சதவீத உயர்வு), பினான்ஸ் காயின் - 424.26 டாலர் (3.50 சதவீத சரிவு), டெதர் - 1.00 டாலர் (0.03 சதவீத சரிவு), போல்காடாட் - 33.83 டாலர் (1.47 சதவீத உயர்வு), டோஜ்காயின் - 0.246 டாலர் (2.45 சதவீத உயர்வு).
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!



Click it and Unblock the Notifications