வரலாறு காணாத உச்சத்தை எட்டியது பிட்காயின் மதிப்பு! மேலும் உயருமா? - நிபுணர்கள் விளக்கம்

உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்யும் போக்கு பரவலாக அதிகரித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்களின் மதிப்பு வேகமான உயர்வை கண்டு வருகிறது.

பிட்காயின்: அந்த வகையில் ஒரே நாளில் பிட்காயின் மதிப்பு கிட்டத்தட்ட 1.43 சதவீதம் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆசிய சந்தை வர்த்தகத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 1,24,000 அமெரிக்க டாலர்கள் என உயர்வு கண்டுள்ளது. இந்திய ரூபாயின் மதுப்பில் இது 1 .08 கோடி ரூபாய் ஆகும். ஒரே நாளில் பிட்காயின் மதிப்பு 1.43 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

வரலாறு காணாத உச்சத்தை எட்டியது பிட்காயின் மதிப்பு! மேலும் உயருமா?  - நிபுணர்கள் விளக்கம்

கிரிப்டோ: அடுத்ததாக இரண்டாவது பெரிய கிரிப்டோ நாணயமான எத்திரியம் மதிப்பும் 4780 டாலர்கள் என உயர்ந்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு எத்திரியத்தின் மதிப்பு இவ்வளவு உயர்வது இதுவே முதன்முறையாகும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்து இருப்பதே பிட்காயினின் மதிப்பு உயர்வதற்கு காரணமாக அமைந்திருக்கிறது .

உயர்வுக்கு காரணம் என்ன: பல்வேறு முதலீட்டு நிறுவனங்களும் தற்போது பங்குச் சந்தைகளுக்கு மாற்றாக அதிக அளவிலான பணத்தை பிட்காய்களை நோக்கி திருப்பி விட்டிருக்கின்றன. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கிரிப்டோ முதலீடுகளை படிப்படியாக அங்கீகரித்து வருகிறது. இந்த காரணங்களால் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது என ஐஜி மார்க்கெட் நிறுவனத்தின் ஆய்வாளர் டோனி தெரிவித்திருக்கிறார்.

32% உயர்ந்த பிட்காயின்: 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை பிட்காயின் மதிப்பு 32 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கிரிப்டோ நாணயங்கள் மீதான டிரம்பின் நிலைப்பாடு அவற்றின் மதிப்பு உயர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதிபர் டிரம்ப் தன்னை கிரிப்டோ அதிபர் என அழைக்கும் அளவிற்கு இந்த முதலீட்டை அவர் பெருமளவில் ஆதரிக்கிறார் . 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையின் மதிப்பு 2.5 டிரில்லியன் டாலராக தான் இருந்தது அது தற்போது 4.18 டிரில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.

மேலும் உயருமா: அமெரிக்க பங்கு சந்தையில் கிரிப்டோ ஈடிஎப் திட்டங்களும் கொண்டுவரப்பட்டு, மக்கள் மத்தியில் கிரிப்டோ மீதான முதலீடுகள் நம்பிக்கையானவைதான் என்ற ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கி தந்திருக்கிறது. அடுத்து வரும் மாதங்களிலும் கிரிப்டோ நாணயங்களின் மதிப்பு வளர்ச்சியிலேயே இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த கட்டமாக பிட்காயின் மதிப்பு 1, 25,000 டாலர்கள் வரை எட்டலாம் என்றும் அடுத்த ஆண்டுக்குள் 1,37 ,000 டாலர்கள் வரை எட்ட கூடும் என்றும் முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+