கிரிப்டோ கரன்சிகளில் பிரபலமாக இருக்கக்கூடிய பிட்காயினின் மதிப்பு வியாழக்கிழமை அன்று மீண்டும் ஒரு லட்சம் டாலர்களை கடந்து வர்த்தகமானது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து பிட்காயினின் மதிப்பு உயரத் தொடங்கியது.
அமெரிக்காவில் வியாழக்கிழமை அன்று ஒரே நாளில் பிட்காயின் மதிப்பு 4.7 சதவீதம் இருந்து ஒரு பிட் காயின் மதிப்பு 1,01,329. 97 டாலர்கள் என வர்த்தகமானது. கடந்த ஜனவரி மாதம் பிட்காயின் மதிப்பு முதன்முறையாக 1 லட்சம் டாலர்களை கடந்து 1,09,000 டாலர்கள் என்ற உச்சத்தை தொட்டது. இந்த வரலாறு காணாத உச்சத்தில் இருந்து பின்னர் சரிவடைந்த பிட்காயின் மதிப்பு மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு லட்சம் டாலர்கள் என்ற மதிப்பை தாண்டி வர்த்தகமாகியுள்ளது.

அதேபோல ஈதர் எனப்படும் கிரிப்டோ கரன்சியின் மதிப்பும் 14 சதவீதம் உயர்ந்து 2,050 டாலர்கள் என வர்த்தகமானது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றார். டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர் என்பதால் டொனால்ட் டிரம்பின் வெற்றியை அடுத்து பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு உயரத் தொடங்கியது.
ஜனவரி மாதம் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதை அடுத்து பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. பின்னர் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். சீனாவுடன் வர்த்தக போரையும் தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் ஒரு பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இதன் காரணமாக பிட்காயின் மதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பிட்காயின் மதிப்பு வியாழக்கிழமை அன்று உயர தொடங்கியது. கடந்த மாதம் பிட்காயினின் மதிப்பு 75,000 டாலர்கள் வரை சரிந்த நிலையில் மீண்டும் உயர்ந்து வந்திருக்கிறது.
இதனிடையே அடுத்த சில மாதங்களுக்கு கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு இதுபோல ஏற்ற இறக்கத்தில் தான் இருக்கும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு முதலீட்டு நிறுவனங்களும் பிட்காயின் ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய தொடங்கி இருப்பதும் பிட்காயின் மதிப்பு உயர்வதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளை அங்கீகரிக்கும் வகையிலான அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் தான் ஜனவரியில் அதன் மதிப்பு உயர்ந்தது, ஆனால் டிரம்ப் இதுவரை அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை என்பதால் கிரிப்டோ கரன்சி சந்தையே சரிவடைந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications