புதிய திருப்பம்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுக்கு ரகசிய அறிக்கை அனுப்பிய ஈரான்..!!

ஈரான் போர் கடந்த 5 மாதங்களாக உலகமே அதிகமாக பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர் இடையில் ஒரு பிரேக் விட்டு மீண்டும் தொடங்கிவிட்டது. அமெரிக்காவும் ஈரானும் ஒரு நாள் சமாதானமாக பேசுகின்றன. ஆனால் அடுத்த நாளே பெரிய தாக்குதலை நடத்துகின்றன.

ஈரான் போரின் போக்கு ஒரு புரியாத புதிராகவே நீடிக்கிறது. இந்த போர் முடியுமா, முடியாதா , கச்சா எண்ணெய் விநியோகம் சீராகுமா என்ற கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கும் நிலையில் ஈரான் போர் தகவல்களை கொண்டு பெரிய சுதாட்டம் நடப்பதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் வெளியான வண்ணம் உள்ளன.

புதிய திருப்பம்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுக்கு ரகசிய அறிக்கை அனுப்பிய ஈரான்..!!

ஈரான் போர் தொடர்பான தகவல்களை முன் கூட்டியே தெரிந்து சிலர் பங்குச்சந்தையில் பெரிய லாபம் பார்க்கின்றனர், குறிப்பாக டிரம்ப் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இதனை செய்கின்றனர் என குற்றச்சாட்டுகள் எழுவதும் பின்னர் நீர்த்து போவதுமாக இருக்கின்றன. இந்நிலையில் முதன்முறையாக ஈரானே இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுக்கு ஈரான் ரகசிய எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக அதில் ஈரான் போர் தகவல்கள் அமைதி பேச்சுவார்த்தை ஆகியவற்றை கொண்டு பெரிய அளவில் Market Manipulation நடப்பதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளதாம். Insider trading முயற்சிகள் நடந்துள்ளதாக ஈரான் அந்த ரகசிய அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக டிராப் சைட் என்ற இணையதளத்தில் வெளியாகும் செய்தி கூறுகிறது.

இதன் படி ஈரான் தரப்பில் இருந்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்குத் தூதரக வழிமுறைகள் மூலம் நேரடியாக எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளதாம். போர்ச் சூழலை தீவிரப்படுத்தும் வகையில் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளும், ஹார்முஸ் ஜலசந்தி மோதல்கள், சரக்கு கப்பல் போக்குவரத்து தடைகள் ஆகிய அனைத்துமே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையிலும் மற்றும் பங்கு சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. திடீரென பங்குகள் உயர்வது, சரிவது கச்சா எண்ணெய் விலை உயர்வது சரிவது என பல மாற்றங்கள் நடக்கின்றன. இது சிலர் செய்யும் சூதாட்ட வேலை என ஈரான் சாடியுள்ளது.

புதிய திருப்பம்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுக்கு ரகசிய அறிக்கை அனுப்பிய ஈரான்..!!

ஈரான் அனுப்பிய அந்த ரகசிய எச்சரிக்கையில், அமெரிக்க அரசின் சில முக்கிய முடிவுகள் மற்றும் அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்பே, அவை குறித்த தகவல்கள் குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளுக்கு கசிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், டிரம்ப் மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரை தான் ஈரான் மறைமுகமாக குற்றம்சாட்டுகிறது என சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய ராஜாங்க முடிவுகள் அல்லது ராணுவ அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே, நிதிச் சந்தையில் பெரும் தொகையை முதலீடு செய்து, செயற்கையாக வில ஏற்ற இறக்கங்களை உருவாக்கி பல கோடி டாலர் லாபம் ஈட்ட சதி நடந்துள்ளதாக ஈரான் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் போது, ஒரு இடைத்தரகர் மூலமாக ஈரான் ஜே.டி.வான்ஸுக்கு ஒரு அறிக்கை அனுப்பியதாம். அதில் ஜூன் 17-அன்று எட்டப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை ஒரு நிரந்தர ஒப்பந்தமாக மாற்றும் முயற்சிகளை, விட்கோஃப் மற்றும் குஷ்னர் ஆகியோரின் தொடர்ச்சியான ஈடுபாடு சீர்குலைக்கிறது என கூறியதாம்.

அதாவது இந்த இருவரும் அமைதி பேச்சுவார்த்தையை சரியான பாதையில் செல்ல விடாமல் இந்த தகவல்களை வைத்து நிதி ரீதியாக லாபம் பார்ப்பதிலேயே குறியாக இருந்தனர் என கூறியுள்ளது ஈரான். பேச்சுவார்த்தைகள் குறித்த ரகசிய தகவல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர் என கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போதும், பாகிஸ்தான் மூலம் இந்த தகவ்லை ஈரான் , அமெரிக்க அதிபர் டிரம்புக்கே அனுப்பியதாம். அவர் நடவடிக்கை எடுக்காத சூழலில் தான் துணை அதிபரை நாடி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரகசிய தகவல்களை பயன்படுத்தி பங்குச்சந்தையில் 9 பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்துள்ளனர் என தெரிவ்பித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க பங்குச்சந்தையில் சந்தேகத்துக்கு இடமான சில பரிவர்த்தனைகளும் பங்கு விற்பனைகளும் நடப்பதாக ஆய்வாளர்கள் கூறும் நிலையில் ஈரானும் அதே போன்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

ஆனால் அமெரிக்க வெள்ளை மாளிகை இந்த தகவலை மறுத்துள்ளது. ஈரானிடம் இருந்து எந்த ஒரு அறிக்கையும், ஜே.டிவான்ஸுக்கு வரவில்லை அவர்கள் கூறுவதை போல இன்சைடர் டிரேடிங்கும் நடக்கவில்லை என கூறியுள்ளது. இதற்கு முன்பு இத்தகைய குற்றச்சாட்டு எழுந்த போதும் டிரம்பின் பங்கு பரிவர்த்தனைகள் அவரால் நிர்வாகம் செய்யப்படுவதில்லை அதற்கென தனி நிறுவனங்கள் இருக்கின்றன என விளக்கம் தந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+