போரிஸ் ஜான்சன்& ரிஷி சுனக் ஒப்புதல்.. தேர்தலுக்கு முன் அதை செய்கிறோம்! அடுத்த பிரதமரும் இவர் தானா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாட்டின் பிரதமரே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, பின் உயிர்பிழைத்தார் என்றால், அது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தான். பிரிட்டனின் சிறந்த அரசியல்வாதியான இவர், தற்போதைய பிரதமரும் கூட.

 

இவர் சிறந்த அரசியல் வாதி என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. அவற்றில் பிரெக்ஸிட் தொடர்பான வாக்குறுதியின் அடிப்படையிலேயே கடந்த இங்கிலாந்து தேர்தல் முடிவுகள் வந்ததாக கூறப்படுகிறது.

ஏனெனில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் என்று போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார். அதுவே முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது.

தேர்தலுக்கு முன்பு வரி குறைப்பு

தேர்தலுக்கு முன்பு வரி குறைப்பு


இதற்கிடையில் தற்போது பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் இருவரும், இங்கிலாந்தின் அடுத்த தேர்தலுக்கு முன்பு, தனி நபர் வரியினை குறைப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக ஞாயிற்றுகிழமையன்று வெளியான லண்டனின் ஷண்டே டைம்ஸ் நியூஸ் பேப்பர் வெளியிட்டுள்ளது.

அரசு நிதி திரட்டலாம்

அரசு நிதி திரட்டலாம்

ஆனால் அதே நேரம் மற்றொரு தரவு கொரோனா வைரஸிக்கு மத்தியில், அரசாங்கம் நிதி திரட்ட வேண்டும். மேலும் வாக்காளர்களுக்கும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி திரட்ட சுனக் கூறலாம் எனவும் வெளியிட்டுள்ளது. அதோடு நவம்பர் மாத வரவு செலவுத் திட்டத்தில், ஒரு வளைவை நிதியமைச்சர் கோடிட்டு காட்டலாம் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆக இதன் கீழ் செல்வந்தர்கள் அதிக வரி செலுத்துவார்கள் என்றும் கூறப்பட்டது.

வரி அதிகரிப்புக்கு வாய்பே இல்லை
 

வரி அதிகரிப்புக்கு வாய்பே இல்லை

எனினும் 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் வரி குறைப்பினை பெறுவார்கள் என கூறியுள்ளது. இது குறித்து தனது கருத்தினை கூறியுள்ள சுனக் நடப்பு ஆண்டில் வரி அதிகரிப்புக்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருமான வரி, தேசிய காப்பீடு அல்லது மதிப்பு கூட்டப்பட்ட வரியில் எதுவும் உயர்வுகளை அனுமதிக்க தயாராக இல்லை என்றும் சுனக் கூறியுள்ளார்.

வெற்றிக்கு அடிக்கல்

வெற்றிக்கு அடிக்கல்

கடந்த வாரம் பிரிட்டனின் பத்திரிக்கைகள், போரிஸ் தலைமையிலான நிதியமைச்சகம் வரி குறித்து கவனம் செலுத்துவதாக கூறப்பட்டது. இந்த அறிக்கையினை, இது ஊகங்கள் எனவும் சுனக் கூறியதாகவும் வெளியிட்டுள்ளது.

எனினும் தேர்தலுக்கு முன்பு வரியினை குறைக்க ஒப்புதல் அளித்துள்ளது, அடுத்த தேர்தலுக்கு, வெற்றிக்கு அடிக்கல்லாக இருக்கலாமோ என்றும் பல கருத்துகள் நிலவி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Boris johnson and UK FM agreed to cut personal taxes before next election

UK Prime Minister Boris Johnson and finance minister rishi sunak agreed to cut personal taxes before next election.
Story first published: Sunday, September 6, 2020, 14:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X