போரிஸ் ஜான்சனுக்கு காத்திருக்கும் சவால்கள்.. பொருளாதாரத்தினை மீட்க என்ன செய்யப் போகிறார்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவினால் உலக பொருளாதாரம் 90 ஆண்டுகளில் இல்லாத அளவு அடி வாங்கப் போகிறது என்கிறது ஓர் அறிக்கை.

இதே கொரோனா வைரஸ் காரணமாக 1930களில் ஏற்பட்ட கடுமையான நெருக்கடிக்கு பிறகு தற்போது உலகம் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கிறது என்று கூறினார் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறினார்.

இன்னும் சில அறிக்கைகள் நாம் பொருளாதாரத்திலிருந்து மீள சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறியுள்ளன.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இப்படி ஆளாளுக்கு கூறி வருவதற்கு முக்கிய காரணம்., உலக நாடுகள் அனைத்தும் லாக்டவுனால் முடக்கப்பட்டுள்ளன. இதனால் நிறுவனங்கள் மூடப்பட்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். உலகம் முழுக்க கொரோனா வைரஸ் காரணமாக 330 கோடி மக்கள் வேலையினை இழப்பார்கள் என ஐநா ஆய்வு தெரிவித்துள்ளது.

லாபம் வீழ்ச்சி

லாபம் வீழ்ச்சி

இந்த நிலையில் பிரிட்டீஸ் நிறுவனங்கள் 2019ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில், லாபம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. இது கொரோனாவிற்கு முந்தைய நிலை என்றும் அறிவித்துள்ளது. கொரோனாவிற்கு முன்பே இந்த நிலை என்றால், அதன் பின்பு எந்த அளவு சரிவினைக் சந்திக்கும் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதெல்லாம் தான் காரணம்

இதெல்லாம் தான் காரணம்

இதற்கு காரணம் கொரோனா வைரஸினை காட்டிலும், பிரெக்ஸிட் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் பற்றிய கவலைகள் முன்னணியில் உள்ளதாகவும் செவ்வாய் கிழமையன்று வெளியான ஒர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அப்போது நிறுவனங்களின் வளர்ச்சி இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

வருவாய் வீழ்ச்சி

வருவாய் வீழ்ச்சி

தனியார் நிதி அல்லாத நிறுவனங்களுக்கான நிகர வருவாய் 2019ம் ஆண்டில் மூன்றாம் காலாண்டில் 9.8 சதவீதத்திலிருந்து, நான்காம் காலாண்டில் 9.3 சதவீதமாகக் குறைந்தது. இது 2009ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து மிகக் குறைவானது. பொருளாதாரம் மிக மோசமான நெருக்கடி நிலையில் இருந்த போது, இருந்த நிதி நெருக்கடி 2019 இறுதியில் நிலவியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூன்று வருடம் ஆகும்

மூன்று வருடம் ஆகும்

இந்த நிலையில் மற்றொரு அறிக்கையில், இங்கிலாந்து பொருளாதாரம் கொரோனாவில் இருந்து மீண்டு வர இன்னும் மூன்று வருடம் ஆகும் என்கிறது. வேலைகள் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும் போது 2023ல் பொருளாதாரம் மீண்டு வரும் என்று கூறி வருகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கை வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், கொரோனாவின் உக்கிரம் மட்டும் ஓய்ந்த பாடாக இல்லை.

போரிஸ் ஜான்சனுக்கு முன் உள்ள சவால்

போரிஸ் ஜான்சனுக்கு முன் உள்ள சவால்

உலகையே இன்றளவிலும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனையும் விட்டு வைக்கவில்லை எனலாம். 55 வயதான அவர் மரணத்தின் அருகில் சென்று தற்போது மீண்டுள்ளார், இந்த நிலையில் பொருளாதாரத்தின மீட்டெடுக்க இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாரே. ஏற்கனவே பெரிய சவாலை சந்தித்த அவருக்கு, மற்றொரு சவாலை எப்படி எதிர்கொள்ள போகிறாரோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

boris johnson will face tough economic situation

British corporate profitability hit 10-year low in late of 2019 before Covid-19 disruption.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X