பூனைக்கு மணி கட்டியாச்சு.. முதல் சிக்சர் பிரிட்டன்.. அடுத்து இந்தியாவா..?

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார். இந்த சூழலில் பல்வேறு நாடுகளும் வரிவிதிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்கா - பிரிட்டன் ஒப்பந்தம்:

இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் " இன்று நான் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவிக்க போகிறேன். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் வெற்றி தனமான இந்த நாளில் இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது" என்பதை அவர் குறிப்பிட்டார்.

பூனைக்கு மணி கட்டியாச்சு.. முதல் சிக்சர் பிரிட்டன்.. அடுத்து இந்தியாவா..?

விரைவில் கையெழுத்து:

இதனை அடுத்து வீடியோ கான்பிரன்ஸ் வழியாக அமெரிக்க அதிபர் டிரம்பும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரிட்டன் பிரதமர் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என தெரிவித்தார். தற்போது இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் இறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், கூடிய விரைவில் அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டு இரு நாடுகளும் முறைப்படி கையெழுத்து இடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வேளாண் பொருட்கள் ஏற்றுமதி:

இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா வேளாண் பொருட்கள் அதிக அளவில் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என டிரம்ப் கூறி இருக்கிறார். அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு பிரிட்டன் புதிய சந்தை வாய்ப்பாக அமைந்திருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.

இறக்குமதி வரி குறைகிறது:

இந்த வர்த்தக ஒப்பந்தத்தின்படி பிரிட்டனில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி கணிசமான அளவு குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல அமெரிக்காவிலிருந்து பிரிட்டனில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டை சேர்ந்த வணிகர்களும் தொழில் புரிவது வணிகம் செய்வது எளிதாக்கப்பட உள்ளது.

வாகனங்களுக்கான வரி 10%ஆக குறைவு:

அண்மையில் தான் பிரிட்டன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்தது. தற்போது அமெரிக்காவுடனும் வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பிரிட்டன் வாகனங்களுக்குகான வரி 27.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுகிறது. பிரிட்டனில் உற்ப்த்தி செய்யப்படும் வாகனங்களில் சுமார் 25 சதவீதம் வாகனங்கள் அமெரிக்க சந்தையில் தான் விற்பனை ஆகின்றன.

ஸ்டீல் மீதான வரி பூஜ்ஜியமானது:

அதே போல ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரி தற்போது 25 சதவீதமாக இருக்கிறது அது பூஜ்ஜியமாக மாற இருக்கிறது. அதாவது விமானங்களை தயாரிக்க தேவையான பொருட்களை பிரிட்டனை சேர்ந்த நிறுவனங்கள் இனி எந்தவித இறக்குமதி வரியும் இல்லாமல் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க முடியும். பிரிட்டனில் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் எத்தனால் பெருமளவில் அமெரிக்காவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் எந்த ஒரு வரியும் இல்லாமல் எத்தனால் இறக்குமதி செய்யப்படும். இதனால் பிரிட்டனில் மதுபானம் தயாரிக்கும் செலவு குறையும். அவற்றின் விலையும் குறையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+