சியாட்டில்: உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் மக்களின் நலனுக்காக பல வடிவங்களில் பண உதவி செய்து வருகிறார். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி துவங்கிய பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு இவ்வருடம் மட்டும் 2.1 பில்லியன் டாலர் நன்கொடையாக அளிப்பதாக தெரிவித்தார்.
இத்தொகையை பஃபெட் பங்கு வடிவங்களில் அளிப்பதாகவும் தெரிவித்தார், ஆதாவது வாரன் பஃபெட் தலைவராக விளங்கும் Berkshire Hathaway நிறுவனத்தின் 16.6 மில்லியன் பங்குகளை இந்த அறக்கட்டனைக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இரண்டாவது பணக்காரர்
84 வயதாகும் வாரன் பஃபெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த திங்கட்கிழமை புதிய உச்சத்தை தொட்டதால் டாப் 10 பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த மெக்சிகோவை சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம் அவர்களை முன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளார்.
மொத்த சொத்து மதிப்பு
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலின் படி வாரன் பஃபெட் அவர்களின் சொத்து மதிப்பு 74.4 பில்லியன் டாலராகும்.
வெல்த்-எக்ஸ்
சந்தை ஆய்வு நிறுவனமான வெல்த்-எக்ஸ் நிறுவனத்தின் தகவல் படி பஃபெட் அளித்த நன்கொடையே இவ்வருடத்தின் மிகப்பெரிய நன்கொடையாக உள்ளது. அவரை தொடர்ந்து கோ-ப்ரோ நிறுவனத்தின் தலைவரான நிக்கோலஸ் வுட்மேன் சிலிக்கான் வேலி கம்யுனிட்டி பவுன்டேஷனுக்கு அளித்த 497.5 மில்லியன் டாலர் தொகை இரண்டாம் இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications