உலகில் பல நாடுகள் விசித்திரமான சலுகைகளை அவ்வபோது அறிவிக்கும் திருமணம் செய்துகொள்ளப் பணம், வீடு வாங்கினால் பணம், குறிப்பாக வெளிநாட்டவர்களை ஈர்க்கும் வண்ணம் இந்தச் சலுகைகள் இருக்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் பொதுவாக இதுபோன்ற விஷயங்கள் எப்போதும் வரவேற்பும் ஈர்ப்பும் இருக்கும்.
அந்த வகையில் இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியில் Calabria என்னும் பகுதியில் குடியேறும் மக்களுக்கு அந்நாட்டு அரசு சுமார் 26000 பவுண்ட் அதாவது 26.48 லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளது. சும்மா கொடுப்பாங்களா துட்டு என்பது போல இதற்குச் சில கண்டிஷன்களும் வைத்துள்ளது அரசு.

Calabria என்னும் பகுதி இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியில் இருப்பது மட்டும் அல்லாமல் இது கால்களைப் போலவே இருக்கும் காரணத்தால் TOE எனச் செல்லமாக அழைக்கப்படும் ஒரு அழகிய கடற்கரை நகரம் இது. கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் மக்கள் தொகை வேகமாகக் குறைந்து வருகிறது, இது அப்பகுதியில் வாழும் மக்களுக்குப் பெரும் சோகமாக இருந்து வருகிறது.
இதுபோன்று புதிதாகக் குடியேறுபவர்களுக்குப் பணம் கொடுப்பது Calabria மட்டும் அல்ல இப்பகுதியில் Civita, Samo and Precacore, Aieta, Bova, Caccuri, Albidona, Santa Severina ஆகிய கிராமங்களும் அளிக்கத் தயாராக உள்ளது.
இந்தப் பிரச்சனையைக் களையும் வேளையில், புதிய வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியில் இத்தாலி இறங்கியுள்ளது. இந்த நகரத்திற்கு வர திட்டமிடும் நபர்கள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும், அனுமதி பெற்ற 90 நாட்களில் Calabria நகரத்திற்குக் குடியேற வேண்டும்.
குடியேறுவது மட்டும் அல்லாமல் புதிதாக வருபவர்கள் முதலீடு செய்து வர்த்தகத்தைத் துவங்க வேண்டும், இந்த வர்த்தகம் அடிப்படையில் இருந்தும் துவங்கலாம் அல்லது அங்கிற்கும் வர்த்தகத்தைக் கைப்பற்றியும் முதலீடு செய்து விரிவுபடுத்தலாம். இதன் மூலம் இப்பகுதியில் புதிய உத்வேகம் பிறக்கும் என இத்தாலி அரசு நம்புகிறது.
இந்தத் தொகையைக் குடியேறியவர்களுக்கு 3 வருடத்திற்குள் செலுத்த வேண்டும் என்ற இலக்கை கொண்டு உள்ளது, இத்தாலி அரசு இளம் தலைமுறையினருக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. Calabria கடற்கரை கிராமத்தில் வெறும் 5000 பேர் மட்டுமே உள்ளனர்.


Click it and Unblock the Notifications