தாய்லாந்து: தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே எல்லையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளும் தீவிரமாக சண்டை போட்டு வருகின்றன. தாய்லாந்து போர் விமானங்களை அனுப்பி கம்போடியாவை தாக்குகிறது. இரு நாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் கவனமாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
எல்லை பிரச்சினை: தாய்லாந்திருக்கும் கம்போடியாவிற்கும் இடையே எல்லையில் என்ன பிரச்சனை ,திடீரென இரண்டு நாடுகளும் குண்டுகளை வீசி தாக்கிக்கொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்பது குறித்து நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். கம்போடியா, தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சண்டைக்கு முக்கிய காரணமாக இருப்பது ஒரு பகுதி தான். இதனை எமரால்டு டிரையாங்கில் என அழைக்கிறார்கள்.
எமரால்டு டிரையாங்கில் : தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து கம்போடியாவுடன் எல்லையை பகிர்கிறது. எல்லை பகிர்ந்தாலே குறிப்பிட்ட இடம் எங்களுக்கே சொந்தம் என சண்டை ஏற்படுவது வாடிக்கை தானே. இங்கே இடம் மட்டும் பிரச்சினை கிடையாது. எமரால்டு டிரையாங்கில் என்பது முக்கோண வடிவிலான ஒரு பகுதி. இங்கே தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய மூன்று பகுதிகளும் சந்திக்கின்றன. இங்கே பாரம்பரிய இந்து கோயில்களும் புத்த கோயில்களும் இருக்கின்றன.

எல்லையில் இருக்கும் சிவன் கோயில்: எல்லையில் தாய்நாந்தில் சுரின் என்ற மாகாணமும் கம்போடியாவில் ஓட்டர் மீஞ்சே என்ற மாகாணமும் அமைந்துள்ளன. தாய்லாந்தின் சூரின் மாகாணத்தில் பிரசாத் தா மூன் தோம் (Prasat Ta Muen Thom) என்ற கோயில் இருக்கிறது. அதேபோல கம்போடியாவில் பிரசாத் பிரி விஹார் (Prasat Preah Vihear) என்ற ஒரு கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு கோயில்களுமே இந்து கோயில்கள் இவை குறிப்பிட்ட இடைவெளியில் அமைந்திருக்கின்றன. இதே போல புத்த கோயிலும் இருக்கிறது.
12ஆம் நூற்றாண்டு கோயில்: இதில் பிரசாத் தா மூன் தோம் கோயில் 12ஆவது நூற்றாண்டில் இந்த கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் சிவனை வழிபடுகின்றனர். இயற்கையாகவே கல்லில் உருவான சிவலிங்கத்தை மக்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள். மொத்தமாக இந்த பகுதியே யாருக்கு சொந்தம் என்பது தான் பிரச்சினை.
கோயிலில் வழிபடும் மக்கள்: இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களும் வந்து இந்த கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோயில்கள் அமைந்துள்ள பகுதி எங்களுக்கே சொந்தம் என கம்போடியா கூறுகிறது ஆனால் தாய்லாந்து எங்களுக்கு தான் சொந்தம் என பதிலுக்கு சண்டை போட்டு வருகிறது. இங்கே இரு நாட்டு ராணுவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். அப்படி அடிக்கடி இந்த பகுதியில் அவ்வப்போது பிரச்சனைகளும் இருநாட்டு எல்லையிலும் பதற்றம் உண்டாகும் பின்னர் அந்த பதற்றம் தனித்துவிடும்.

இப்போது ஏன் சண்டை? : ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் கம்போடியா நாட்டுப் படைகள் தாய்லாந்துக்குள் அத்துமீறிநுழைந்ததாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது. இதனை அடுத்து பதற்றம் அதிகமாகிவிட்டது. 1907 ஆம் ஆண்டு பிரெஞ்ச் காலனி அரசு இரு நாடுகளையும் பிரித்து ஒரு வரைபடத்தை தயாரித்தது. அந்த வரைபடத்தின் படி இந்த பகுதி கம்போடியாவுக்கு சொந்தம், ஆனால் தாய்லாந்து இது எங்களுக்கு சொந்தமானது அந்த வரைபடம் தவறானது எனக் கூறி வருகிறது.
நீதிமன்ற தீர்ப்பை தாய்லாந்து ஏற்கவில்லை: கம்போடியா அரசு இதனை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது அப்போது சர்வதேச நீதிமன்றம் இந்த கோயில்கள் அமைந்துள்ள பகுதி கம்போடியாவுக்கே சொந்தம் என தீர்ப்பு தந்தது. ஆனால் அந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்க மறுக்கிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications