அரசியல் கன்சல்டன்ஸி நிறுவனமான கேம்பிரிஜ் அனலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக் தனிநபர் விவரங்களை முறை கேசாட பயன்படுத்தியாகக் குற்றம்சாட்டப்பட்ட விவாதத்திற்குள்ளான நிலையில் அமெரிக்கச் சட்டங்கள் அத்தியாயம் 7-ன் கீழ் திவால் ஆனதாக அறிவித்துள்ளது.
2014-ம் ஆண்டு முதல் 87 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் விவரங்கள் 2016 அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு டிரம்பிற்காக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சர்ச்சை எழுத நிலையில் மிகப் பெரிய அளவில் இந்தப் பிரச்சனை உருவெடுக்க அதனை மார்க் ஜூக்கர்பெர்க்-ம் ஒப்புக்கொண்டார்.
ஏன் இந்தத் திவால் சூழல்
பேஸ்புக் தரவுகள் சர்ச்சை அடுத்ஹ்டு கேம்பிரிட்ஸ் அனலிட்டிகா மற்றும் அதன் தாய் நிறுவனமான எஸ்சிஎல் எல்க்ஷன்ஸ் இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் பெற முடியாமல் வருவாய் சரிவால் ஒரு மாதத்திற்கு முன்பே திவால் ஆகும் நிலைக்குச் சென்றுள்ளன.
அத்தியாயம் 7 தாக்கல்
எனவே கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் நியூ யார்க்கில் உள்ள அமெரிக்கத் தெற்கு பிராந்திய திவால் நீதிமன்றத்தில் அத்தியாயம் 7-ஐ தாக்கல் செய்துள்ளது. இது திவால் ஆனதாக அறிவிப்பதற்காகத் தாக்கல் செய்ய வேண்டிய படிவம் ஆகும்.
கடன்
கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் 1,00,001 டாலர் முதல் 5,00,000 வரை சொத்துக்கள் வைத்திருக்கும் என்று கூறும் நிலையில் 1 மில்லியன் டாலர் முதல் 10 மில்லியன் டாலர் வரை கடனும் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கேம்பிர்டிஜ் அனலிட்டிக்கா
அமெரிக்கத் தேர்தலை முன்னிறுத்தி 2013-ம் ஆண்டு லண்டனை தலைமையிடமாகக் கொண்டு கேம்பிர்ட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் 15 மில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
பங்குகள் சரிவு
பேஸ்புக் தரவுகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட விவரங்கள் வெளியான உடன் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு சரிவை சந்தித்தது. மார்க் ஜூக்கர்பெர்க் நீதிமன்றம் சென்று விளக்கம் அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஆய்வு
இது தொடர்பாகப் பேஸ்புக் நிறுவனம் செய்த ஆய்வில் 200 செயலிகளை நீக்கியுள்ளதாகத் திங்கட்கிழமை பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications