அருமையான வேலைவாய்ப்பு மாதம் ரூ. 4 லட்சம் சம்பளம்! நன்றாக சாப்பிடும் வேலைக்கு வருகிறீர்களா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெண்டக்காய் - கருமம் கொழகொழன்னு இருக்கும். பாகற்காய் - கெரகத்த இதை எல்லாம் மனுசன் சாப்பிடுவானா..? அப்ப என்னத்த தான் சாப்பிடுவ..? எனக் கேட்டால் உருளைக்கிழங்கு என சப்பு கொட்டுபவரா நீங்கள்..?

 

நூடுல்ஸ், பாஸ்தா, சீஸ் போட்டு வளைத்து அடிக்கும் 90-ஸ் கிட்ஸா..? டிவி பார்க்கும் போது முக்கால் கிலோ சிப்ஸை கூட ஒத்தை ஆளாக சாப்பிட்டு விட்டு செரிமானத்துக்கு மிளகு ரசம் குடிக்கும் நல்லவர்களா நீங்கள்..? அப்ப இந்த வேலை உங்களுக்குத் தான்.

உங்களைத் தான் அங்கு ஒரு பெரிய நிறுவனம் வலை வீசி தேடுகிறார்கள். நீங்கள் சிப்ஸ், கேக்குகள், பேஸ்ட்ரிகள், பாஸ்தா, வறுவல்கள் என தொடர்ந்து 30 நாட்களுக்கு இதை மட்டுமே சாப்பிட வேண்டும். அவ்வளவு தான் வேலை

ஆர்டர் பண்ணுங்க

ஆர்டர் பண்ணுங்க

கிட்டதட்ட இதை ஒரு 10 - 6 அலுவலக வேலை போல சாப்பிட வேண்டும் என வைத்துக் கொள்ளுங்களேன். நீங்கள் கேட்கும் டபுள் எக்ஸ்ட்ரா சீஸ் போட்ட தின் க்ரஸ்ட் பீட்ஸா தொடங்கி ரெட் வெல்வெட் கேக் வரை நீங்கள் கேட்கும் அனைத்து ஐட்டமும் அங்கு கிடைக்கும். இப்படி ஒரு மாதம் முழுக்க உங்களுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட வேண்டியது தான் வேலை. அப்படி சாப்பிட்டால் மாத இறுதி நாளில் கையில் 5,000 பவுண்ட் ஸ்டெர்லிங் (4.30 லட்சம் ரூபாயை) கொடுத்து வீட்டுக்கு அனுப்புவார்களாம்.

சோதனை

சோதனை

போட்டி நன்றாக இருக்கிறது அல்லவா..? சரி இந்த 4.3 லட்சம் ரூபாயை யார் கொடுப்பார்கள். ஏன் நமக்கு பிடித்த உருளைக்கிழங்கு வறுவல், பாஸ்தா, பீட்ஸா, கேக், சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளைச் சாப்பிட்டால் இவர்கள் நமக்கு பணம் கொடுக்கிறார்கள். என்கிற கேள்வி எழுகிறதா..? நம்மை ஒரு சோதனைக் கூடமாக, ஒரு சோதனை எலியாக பயன்படுத்தப் போகிறார்கள். அதற்குத் தான் நமக்கு பிடித்த உணவுகளை 30 நாட்களுக்குக் கொடுத்து, நமக்கு பணமும் கொடுத்து அனுப்புகிறார்கள்.

மருந்து நிறுவனம்
 

மருந்து நிறுவனம்

Feel என்கிற மல்டி விட்டமின் நிறுவனம் தான் இந்த பந்தயத்துக்கு ஒப்புக் கொள்ளும் நபர்களுக்கு பணம் கொடுத்து, அவர்கள் உடல் மீது ஒரு குட்டி ஆரோக்கிய சோதனை நடத்தப் போகிறது. இந்த பந்தயத்துக்கு ஒப்புக் கொள்பவர்கள், தேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் மேற்பார்வையில் தங்களுக்கு பிடித்த ஆரோக்கியம் இல்லாத உணவை தினமும் சாப்பிட வேண்டும். அதோடு Feel நிறுவனத்தின் மல்டி விட்டமின் மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும்.

மேற்பார்வை

மேற்பார்வை

இந்த சோதனை தொடங்கப்படுவதற்கு முன்பே பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பவர்களின் ஊட்டச்சத்துக்களைக் குறித்து ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு தீவிரமாகக் கண்காணிப்பார்கள். 30 நாட்கள் முடிந்த பின் மீண்டும் ஊட்டச்சத்து சோதனைகளைச் செய்வார்களாம். இந்த சோதனையின் முடிவில் Feel நிறுவனத்தின் மல்டி விட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான 18 விட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் கிடைக்கும் என நிரூபிக்கப் போகிறார்களாம்.

விதிகள்

விதிகள்

இந்த சோதனையில் பங்கெடுக்க விரும்புபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். உடல் உபாதைகள் இல்லாதவராகவும், இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை அதிகம் சாப்பிடாத மாவுச் சத்துப் பொருட்களை அதிகம் சாப்பிடுகின்றவராக இருக்க வேண்டும். இந்த சோதனை எலி போட்டியில் பங்கு பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கு லிங்கை சொடுக்கவும். https://wearefeel.com/blogs/learn/beige-food-job

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

can you eat beige foods apply for the rs 4 lakh salary job

can you eat beige foods apply for the rs 4 lakh salary job
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X