1 மாதத்தில் 10,000 பேரை வளைத்துபோட்ட கனடா.. இளைஞர்களுக்கு 6 துறைகளில் கொட்டி கிடக்கும் வாய்ப்புகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கனடாவில் வேலை வாய்ப்புகள் குறித்து ஏற்கனவே பல பதிவுகளில் பார்த்து வருகின்றோம். அங்கு 10 லட்சத்திற்கும் அதிகமாக வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

கனடாவில் ஓய்வுபெறுபவர்களின் எண்ணிக்கையானது மிக அதிகமாக உள்ளது. இதனால் கனடாவில் தேவை என்பது அதிகமாக இருந்து வருகின்றது. இதனை பூர்த்தி செய்ய கனடா அரசும் முயற்சி எடுத்து வருகின்றது.

ஏற்கனவே விசாவில் தளர்வு அளிக்க முடிவு செய்துள்ள நிலையில், கனடாவில் தனது குடியேற்ற இலக்குகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

கனடாவில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு.. சிவப்பு கம்பள வரவேற்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட் தான்!கனடாவில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு.. சிவப்பு கம்பள வரவேற்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட் தான்!

நவம்பர் மாத நிலவரம்

நவம்பர் மாத நிலவரம்

இப்படி பல்வேறு அறிவிப்புகளுக்கு மத்தியில் நவம்பர் மாதத்தில் 10,000 புதியவர்களை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் கனடாவின் வேலையின்மை விகிதம் என்பது 5.1% அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதமானது 64.8% ஆக குறைந்துள்ளது.

சம்பளம் அதிகரிக்கலாம்

சம்பளம் அதிகரிக்கலாம்

தொடர்ந்து வேலை வாய்ப்பு வளர்ச்சி என்பது இருந்தபோதிலும், தொடர்ந்து சராசரி மணி நேர சம்பளம் 5%க்கு மேல் இருந்தது. இது 32.11 டாலர்கள் வரையில் மேலாக அதிகரித்துள்ளது. இது இனி வருபவர்களுக்கும் சம்பளத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். மொத்தத்தில் எதிர்காலத்தில் சம்பள விகிதம் அதிகரிக்கலாம் என்பது சாதகமான குறிகாட்டியாக பார்க்கப்படுகிறது.

என்னென்ன துறை?

என்னென்ன துறை?

கனடாவில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகளுக்கு மத்தியில், நிதித்துறை, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட், வாடகை மற்றும் குத்தகை, உற்பத்தி துறை, தகவல் தொழில் நுட்பம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு துறை என பலவற்றிலும் அதிகளவில் பணியமர்த்தல் என்பது இருந்தது.

நிதித்துறை, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட், வாடகை மற்றும் குத்தகை உள்ளிட்ட துறைகளில், கடந்த நவம்பரில் 21,000 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 11.2% கனேடியர்கள் சில்லறை வர்த்தக துறைகளில் வேலையினை பெற்றுள்ளனர்.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

உற்பத்தி துறையில் பணியமர்த்தல் ஆனது 1.1% அதிகரித்துள்ளது. கனடாவின் முக்கிய பகுதிகளான ஆல்பர்ட்டாவில் வேலை வாய்ப்பு என்பது 4.7% அதிகரித்துள்ளது. இதே கியூபெக்-கில் 10,000 பேரை சேர்த்துள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம் கட்டுமானத் துறை மற்றும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக துறையில் கடும் சரிவினைக் கண்டுள்ளது.

எந்த துறையில் சரிவு

எந்த துறையில் சரிவு

கடந்த அக்டோபர் 2022ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில், கனடா முழுவதும் கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்பு 1.6% குறைந்துள்ளது. இதே மொத்த மற்றும் சில்லறை துறையில் 0.8% சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த மே மாதத்தில் இருந்து மொத்தம் 4.4 சரிவினைக் கண்டுள்ளது.

இது தான் உண்மை

இது தான் உண்மை

சமீபத்தில் கனடாவிற்கு நிறைய பேர் தேவை என அந்நாட்டின் அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்திருந்தார். கனடாவில் 7 பேரில் ஒருவர் 55 - 64 வயதிற்குள் உள்ளனர். இந்த காலகட்டத்தில் கனடாவில் வேலை வாய்ப்பு என்பது இதுவரை இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. அதேசமயம் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால், செலவினை அதிகரிக்கும். அது வணிகத்தில் பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தும் என்பதால், விசா நடவடிக்கையில் தளர்வுகளை அறிவித்தது.

மொத்தத்தில் வெளி நாடுகளில் வேலை பார்க்க திட்டமிடும் இளைஞர்களுக்கு இது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: canada job வேலை கனடா
English summary

Canada adds 10,000 jobs in a single month: finance and 6 other sectors saw most hiring

Canada announced that it had added 10,000 newcomers last November. Canada's unemployment rate fell to 5.1%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X