உக்ரைன் - ரஷ்யா பதற்றமானது பேச்சு வார்த்தைக்கு மத்தியிலும் இன்னும் பூதாகரமாகியுள்ளது. இது இன்னும் சுமூக தீர்வு ஏற்படவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என 30-க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கண்ட நாடுகள் பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகளை செய்து வருகின்றன.
இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடை, ஸ்விப்ட் தடை, பல்வேறு நாட்டு நிறுவனங்களும் ரஷ்ய நிறுவனங்கள் உடனான வணிக உறவினையும் முறித்துக் கொண்டு வருகின்றன.
எங்களை ஒன்றும் செய்ய முடியாது
எனினும் இதெல்லாம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்திக் கொண்டே தான் வருகின்றது. சொல்லப்போனால் முன்பை விட கடுமையான தாக்குதல்கள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது. தற்போதைய நிலையில் குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
மக்கள் தாக்குதல்
சில இடங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். மொத்தத்தில் ரஷ்யா உக்ரைன் பதற்றமானது மேற்கொண்டு பூதாகரமாக உருவெடுத்து வருகின்றது. இதற்கிடையில் கனடா உக்ரைனுக்கு ஆதரவினை தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவில் இருந்து தனது எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளது.
கனடா தடை
இதன் மூலம் ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் எண்ணெய் வணிகத்திலேயே, சொல்லப்போனால் ரஷ்யாவின் அடிமடியிலேயே கைவைத்துள்ளது கனடா. இது ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் எண்ணெய் வணிகத்தினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளை குறி வைக்கும் நடவடிக்கை
கனடாவிற்கு ரஷ்யா பெரியளவில் எண்ணெய் இறக்குமதி செய்யாவிட்டாலும், நிச்சயம் இது ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்ய வங்கிகளை குறி வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. ரஷ்யா அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணெய் மற்றும் கேஸ் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கான தொகையினையும் வங்கிகள் மூலமே பரிமாற்றம் செய்து வருகின்றது.
கனடாவின் இறக்குமதி
இந்த நிலையில் வங்கிகளில் பண பரிவர்த்தனை தடைப்பட்டால், அது நிச்சயம் ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கலாம். எனினும் ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாமல், கனடா பெரியளவில் எண்ணெய் இறக்குமதியினை ரஷ்யாவினை நம்பியிருக்கவில்லை. எனினும் இதனால் தாக்கம் இருக்கலாம். கடந்த 2021ல் கனடா 170 மில்லியன் பவுண்டு மதிப்பிலான எண்ணெயினை இறக்குமதி செய்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி
எவ்வாறாயினும் ஐரோப்பிய ரஷ்யாவின் விநியோகத்தை பெரிதும் சார்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் இறக்குமதியில் 4ல் ஒரு பங்கு ரஷ்யாவிலிருந்து வருகிறது. அதேபோல இயற்கை எரிவாயு இறக்குமதி 40% ஆகும். ஆக ஐரோப்பிய நாடுகளின் தடை மிக கடுமையாக இருக்கும். எனினும் இது குறித்து ரஷ்யா தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
பாதிப்பு ஏற்படலாம்
எப்படியிருப்பினும் சர்வதேச அளவில் ரஷ்யாவின் தடைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் பாதித்தால், அது விலை அதிகரிப்பினை எட்டலாம். இதுவும் உலக நாடுகளை பாதிக்கலாம். எப்படியிருப்பினும் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடையானது, உலக நாடுகள் மீதும் எதிரொலிக்கலாம்.
More From GoodReturns

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications