அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரெசிப்புராக்கல் வரி முறையை அறிவித்திருக்கிறார். ரெசிப்புராக்கல் வரி முறை என்பது எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ? அந்தந்த நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரி விதிக்கும். இதற்கு பதிலடியாக தற்போது கனடா பிரதமர் மார்க் கார்மே சில வரிகளை அறிவித்திருக்கிறார்.
கனடா மற்றும் அமெரிக்கா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சில வர்த்தக சலுகைகளை வழங்கி வருகின்றன.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகளை மீறும் பட்சத்தில் அவை 25% வரிக்கு உட்படுத்தப்படும் என்று மார்க் தெரிவித்தார். இது பிரத்தியேகமாக ஒப்பந்தத்தின் விதிமுறைக்கு இணங்காத அமெரிக்க வாகனங்களுக்கு மட்டுமே. மேலும் இந்த 25 சதவீத வரியின் மூலம் கிடைக்கும் வருவாயை கனடாவின் வாகன தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கவும், வாகனத் தொழிலை மேம்படுத்தவும் பயன்படுத்த இருப்பதாக அறிவித்தார்.
இதை தனது X பக்கத்திலும் கார்னி தெரிவித்திருக்கிறார். எங்கள் ஆட்டோமொபைல் துறை மீது ட்ரம்ப் விதித்துள்ள வரிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக எங்கள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணங்காத அனைத்து அமெரிக்க வாகன இறக்குமதிகளுக்கும் கனடா இனி 25 சதவீதம் வரை வரி விதிக்கும். இந்த வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய் அனைத்து ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொழில் துறைக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா விதித்த வரியினால் கனடாவில் உள்ள தொழிலாளர்களுக்கும் வணிகங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் கனடா சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கனடாவின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், மக்களின் நலனைப் பாதுகாக்கவும் இது போன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் கார்னி தெரிவித்தார்.
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும் போட்டாஷ் போன்ற உரங்களுக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. மார்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஏப்ரல் 3-ஆம் தேதி கன்னட ஆட்டோமொபைல்கள் மீது 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இது ஆட்டோமொபைல் துறையையும் நாடு முழுவதும் இந்த தொழிலில் பணிபுரியும் 5 லட்சத்திற்கும் அதிகமான கனேடியர்களையும் பாதிக்கும் என்று கார்னி தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணங்காத ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு தற்போது கார்னி 25 சதவீத வரியை விதித்திருக்கிறார். அமெரிக்கா பிற நாடுகள் மீதும் வரி விதித்துள்ளது. இந்தியா மீது 26 சதவீதமும், கம்போடியா 49 சதவீதமும், வியட்நாம் 46 சதவீதமும், சீனா 34 சதவீதம், ஜப்பான் மீது 24 சதவீதமும், ஐரோப்பிய யூனியனுக்கு 20 சதவீதமும் வரிகளை விதித்திருக்கிறார் டிரம்ப். 180 க்கும் மேற்பட்ட நாடுகள் ட்ரம்ப்பின் வரியை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications