ஐரோப்பாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி மென்பொருள் நிறுவனமான கேப்ஜெமினி ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தையைப் பிடிப்பதற்காக ஐகேட் நிறுவனத்தை வாங்கிய மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது.
இந்நிலையில் தற்போது துறைவாரியாகச் சிறந்து விளங்கும் நிறுவனங்களை வாங்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
அமெரிக்க நிறுவனம்
டிஜிட்டல் கன்சல்டிங் பிரிவில் சிறந்து விளங்கும் வட அமெரிக்க நிறுவனமான லிக்விட்ஹப் என்னும் நிறுவனத்தைச் சுமார் 400 மில்லியன் யூரோ அளவிலான தொகை கொடுத்து முழுமையாகக் கேப்ஜெமினி கைப்பற்ற உள்ளது.
200 மில்லியன்
2017ஆம் ஆண்டில் இந்நிறுவனம் சுமார் 200 மில்லியன் யூரோ வருவாய் பெற்றுள்ள நிலையில் தற்போது கேப்ஜெமினி சுமார் 400 மில்லியன் யூரோ கொடுத்து இந்நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஊழியர்கள்
லிக்விட்ஹப் நிறுவனத்தில் தற்போது சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்கள் அனைவரையும் தற்போது கேப்ஜெமினி நிறுவனத்தின் கீழ் இணைய உள்ளது.
போட்டியாளர்கள்
2017ஆம் ஆண்டு மத்தியில் இந்நிறுவனம் விற்பனைக்கு வந்தது. இந்நிறுவனத்தை வாங்க அப்பெக்ஸ் பார்ட்னர், காக்னிசென்ட், அக்சென்சூர் மற்றும் கேப்ஜெமினி ஆகியவை இந்நிறுவனத்தை வாங்க போட்டிப்போட்டது.


Click it and Unblock the Notifications