அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர், அமெரிக்கா பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வது என்பன உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகள் முதலீட்டாளர்களுக்கு கவலை அளிக்கும் வகையில் இருக்கின்றன. பங்குச்சந்தைகள் வீழ்ச்சி மூலம் பலரும் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரபல முதலீட்டாளரான மார்க் மோபியஸ் பணம் தான் தற்போதைக்கு அரசன் என தெரிவித்திருக்கிறார். அதாவது ரொக்கமாக பணத்தை கையில் வைத்திருப்பதே தற்போதைய சூழலுக்கு உகந்தது என அவர் கூறியிருக்கிறார். அடுத்த ஆறு மாத காலத்திற்கு சர்வதேச அளவில் வர்த்தக பதட்டங்கள் நிகழும் என கூறிய மார்க் மோபியஸ் தன்னுடைய பெரும்பாலான முதலீடுகளை தான் பணமாக்கி வைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போதைக்கு ரொக்க பணமே அரசன் எனக் கூறியிருக்கும் அவர் தற்போது கையில் பெரிய அளவில் ரொக்கத்தை கையிருப்பாக வைத்திருக்கிறேன், சரியான சமயம் வரும்போது அதை நான் முதலீடு செய்வேன் என தெரிவித்திருக்கிறார். ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த விவரத்தை வெளியிட்டார். 30 ஆண்டு காலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்த அனுபவம் கொண்டவர்.
உலக அளவில் புகழ்பெற்ற முதலீட்டாளர்களில் ஒருவராகவும் இவர் இருக்கிறார். இவர் சர்வதேச அளவிலான வர்த்தக மோதல்கள் பங்குச்சந்தை முதலீடுகளை ஆபத்து மிகுந்தவையாக மாற்றி வைத்துள்ளன என குறிப்பிட்டு இருக்கிறார். இருந்தாலும் அமெரிக்க சீன இடையிலான இந்த வர்த்தக முதல் சீனாவுக்கு பாதகத்தையும் இந்தியா போன்ற நாடுகளுக்கு உற்பத்தி ஏற்றுமதி உள்ளிட்ட பிரிவுகளில் சாதகத்தையும் ஏற்படுத்தி தந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
தற்போது இருக்கக்கூடிய இந்த பொருளாதார நிலையற்ற தன்மை என்பது சீராவதற்கு மேலும் சில மாதங்கள் ஆகும் என குறிப்பிட்ட அவர் அடுத்த மூன்றிலிருந்து நான்கு மாத காலங்களுக்கு நான் என்னுடைய பணத்தை ரொக்கமாகவே வைத்திருக்க போகிறேன் என தெரிவித்தார்.
இது சர்வதேச அளவில் முதலீட்டாளர்களுக்கு முக்கியமான ஒரு யோசனையை வழங்கியுள்ளது. மார்க் மோபிஸ் கேபிடல் என்ற பெயரில் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனத்தை கடந்த ஆண்டு இவர் தொடங்கினார். சர்வதேச வர்த்தக மோதலால் இந்தியாவை சேர்ந்த உற்பத்தி நிறுவனங்கள் பலனடையும் என குறிப்பிட்டு இருக்கிறார். அதேவேளையில் இந்தியா ஐடி நிறுவனங்களின் பங்குகளை மிக கவனத்துடன் கையாள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
சீனா தன்னுடைய வர்த்தக கொள்கைகளை மாற்றி அமைத்து உள்நாட்டில் மக்கள் செலவு செய்யும் போக்கை அதிகரிக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீராகும் எனத் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications