பெய்ஜிங்: சீனா தங்களுடைய உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை பிரிவுகளில் முழுமையாக வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீன பொருளாதாரம் இருக்கிறது. சீனாவை பொறுத்தவரை குறிப்பிட்ட சில துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்காமல் இருந்தது. இந்த நிலையில் அந்த தடையினை நவம்பர் 1ஆம் தேதி முதல் நீக்குவதாக சீனாவின் தேசிய மேம்பாடு மற்றும் சீர்திருத்த ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி உற்பத்தி துறையில் வெளிநாட்டினர் இனி தாராளமாக முதலீடு செய்யலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் உற்பத்தி துறையில் முதலீடு செய்ய வேண்டும் எனில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் அதில் பெரும்பான்மையான பங்குகளை கொண்டிருக்க வேண்டும் மற்றும் சீன ஹெர்பல் மருத்துவங்களில் முதலீடு செய்ய முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்திருந்தது. ஆனால் தற்போது அவை அனைத்தையும் நீக்குவதாக தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து உற்பத்தி துறையிலும், சேவை துறைகளிலும் வெளிநாட்டு முதலீடுகளை முழுமையாக அனுமதிக்கும் வகையில் கொள்கைகளை அரசு மாற்றி வருகிறது. சீன அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உற்பத்தி துறை மட்டுமல்லாது மருத்துவ துறையிலும் வெளிநாடு முதலீடுகள் தொடர்பாக பெரிய அளவிலான மாற்றங்களை சீனா அறிவித்துள்ளது.
சுகாதாரத் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு அறிவிப்புகளை சீனா வெளியிட்டுள்ளது. இதன்படி ஸ்டெம் செல் , மரபணு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யலாம் என கூறியுள்ளது. இந்த பிரிவுகளில் ஆய்வு மையங்கள், தொழில்நுட்ப பரிசோதனை கூடங்கள் ஆகியவற்றை பெய்ஜிங், ஷாங்காய், குவாண்டுவாங் மற்றும் ஹைனான் ஆகிய நகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் அமைக்க முடியும்.
சீனாவின் வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பின் படி வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டு வரும் தொழில்நுட்பங்கள் அரசின் அனுமதி கிடைத்தவுடன் நாடு முழுவதும் பயன்பாடு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வெளிநாட்டு நிறுவனங்கள் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ, ஹைனான் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் மருத்துவமனைகளை திறக்கலாம் என சீன அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் ஏற்கனவே செயல்படக் கூடிய பொது மருத்துவமனைகளை மற்றும் சீன பாரம்பரிய மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளை இவர்களால் வாங்க முடியாது, ஆனால் புதிதாக மருத்துவமனைகளை அமைக்கலாம் என தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications