பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா மத்தியில் தற்போது வர்த்தகப் போர் மூண்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தகத்திற்கு எதிராகவும், சீன உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகவும் சீன அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனா
எலக்ட்ரானிக் பொருட்கள் அதிகம் தயாரிக்கும் சீனா, இதன் முக்கியத் தேவையான சிப்பிகளுக்கு அமெரிக்காவை நம்பி தான் இயங்கி வருகிறது. இப்பிரிவில் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகம் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அறிவிப்பு
வர்த்தகப் போரின் காரணமாக அமெரிக்காவை நம்பியிருக்கும் முக்கியப் பொருட்களைச் சீனாவிலேயே தயாரிக்கும் பொருட்டு, சீன அரசு செமிகன்டாக்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்குப் புதிய வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது.
வரி விலக்கு
வெள்ளிக்கிழமை சீன அரசு வெளியிட்ட அறிக்கையின் படி சீனாவில் இருக்கும் சிப் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சில வரிக் கழிப்புகளுடன் 2 முதல் 5 வருடம் வரையில் கார்ப்பரேட் வரிக்கு முழுமையான வரி விலக்கு அளித்துள்ள சீன அரசு.
சிறப்பான திட்டமிடல்
இதுமட்டும் அல்லாமல் இந்த வரி விலக்கு சிறிய அளவிலான கட்டிங் எட்ஜ் சிப் முதல் பெரிய அளவிலான சிப் தயாரிப்புகள் வரையில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய நிறுவனம், பெரிய நிறுவனம் வரையில் வர்த்தகமும், வரிச் சலுகை பெறும்.
ஜனவரி
இப்புதிய வரித் தளர்வுகள் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் லாபத்தை அளிக்க ஜனவரி 1, 2018 முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாகச் சீன அரசு தெரிவித்துள்ளது.
இதேபோன்ற முறையில் சீனாவின் அனைத்து ஹைய்டெக் துறைகளிலும் வரி விதிப்பு முறையை மாற்றியமைக்கச் சீன அரசு முடிவு செய்துள்ளது.
இறக்குமதி
அமெரிக்காவில் இருந்து சீனா இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் அதிக மதிப்பு உடையப் பொருட்களில் இந்தச் செமிகன்டக்டர் சிப் முக்கியமானது. வர்த்தகப் போர் துவங்கிய இந்த நிலையில் இனியும் அமெரிக்காவை நம்பியிருக்கக் கூடாது எனச் சீன வரியைக் குறைத்துள்ளது.
2030..
இந்த வரித் தளர்வுகள் மற்றும் வரி விலக்கு மூலம் 2030ஆம் ஆண்டுக் காலத்தில் சிப் தயாரிப்புச் சீனா சர்வதேச அளவில் முன்னோடியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு
வர்த்தகப் போர் மூண்டுள்ள நிலையில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அமெரிக்காவில் இருந்து அதிகமாகச் சிப்புகளை இறக்குமதி செய்யச் சீனாவிற்கு டிரம்ப் அரசு நிர்வாகிகள் ஆலோசனை வழங்கிய பின்பு சீன அரசு இந்த முடிவிற்கு வந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
15 பில்லியன் டாலர்
தற்போது சீன அரசு வழங்கியுள்ள வரித் தளர்வுகள் மற்றும் 2 முதல் 5 வருட கார்ப்பரேட் வரி விலக்கின் மொத்த மதிப்பு 15 பில்லியன் யுவான் ஆகும். 2.39 பில்லியன் டாலர்.
ரயால் ரயில்..
அடுத்து என்ன??
இவ்ளோ கோடியா..?!
அந்தர் பல்டி
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications