பொதுவாக அமெரிக்காவின் முடிவுகளுக்கு, கருத்துகளை எதிர்த்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தவிர வேறு யாருமே குறல் கொடுக்கமாட்டார்கள். ஆனால் டொனால்டு டிரம்புக்கு அதிபரான பின்பு நிலைமை மாறியுள்ளது சில வாரங்களுக்கு முன்பு டிரம்ப் வட கொரியா மீது வீசிய கருத்துக்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.
இந்தக் கருத்து மோதல்களால் இரு நாடுகளுக்கு மத்தியில் போர் மூளும் அபாயமும் நிலவியது, அதன் பின் பிரச்சனை தணிந்தது. தற்போது சீனா மீது கவனத்தைத் திருப்பியுள்ள டொனால்டு டிரம்ப்-க்கு அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிகப்படியான வரியை விதித்து இருநாடுகளுக்குமான வர்த்தக ஒப்பந்தத்தை மீறியது.
பதிலடி.
பிற நாடுகளைப் போல் அமைதியாக இல்லாமல் சீன, அமெரிக்காவிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது அதிகப்படியான வரி விதித்து அமெரிக்காவின் அதிகாரத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அமெரிக்க அரசு அறிவிப்பு
இந்த வாரம் அமெரிக்கா, சீன பொருட்களுக்கு மீது வரி விதித்துள்ள விபரத்தை முழு அறிக்கையாக வெளியிட உள்ளது என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், சீனா தடாலடியாக 106 பொருட்கள் மீது சுமார் 25 சதவீத வரி விதித்து அமெரிக்காவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அமெரிக்க இறக்குமதி
அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சோயாபீன்ஸ், கார்கள், விஸ்கி என முக்கியமான 106 பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் சீன இறக்குமதியாளர்கள் நிச்சயம் அமெரிக்காவை விடுத்து வேறு நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்வார்கள்.
இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
24 மணிநேரம்
அமெரிக்காவின் முழு அறிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகி 24 மணிநேரத்தில் சீன வரி விதிப்பை அறிவித்துள்ளது. இது பழிக்குபழி என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்க முடிகிறது.
More From GoodReturns

Fact check:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா டிரம்ப்? #Trump Dead ஹேஷ்டேக் உருவானது எப்படி?

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications