இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு முடிவு கட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று சில முக்கியமான அறிவிப்புகளை சீனாவுக்கு ஆதரவாக தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, சீனாவிடம் தான் போர் தாக்குதலை நிறுத்த ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைத்தது. இந்த பேச்சுவார்த்தையின் நீட்சியாக தற்போது இஸ்ரேல் - ஈரான் மத்தியிலான போர் தாக்குதல் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் டிரம்ப், சீனாவுக்கு ஆதரவாக இரண்டு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனா அரிய உலோக ஏற்றுமதியை கட்டுப்படுத்தியதில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் சீனா மீதான அதிரடி நடவடிக்கை எடுக்கும் விதமும், கடுமையான பார்வையும் மாறியுள்ளது என்றால் மிகையில்லை.

ஈரானுக்கு சீனாவின் ஆதரவு:
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடனான தொலைபேசி உரையாடலில், ஈரானின் தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலுக்கு அமெரிக்காவின் தலையீடு மூலம் உருவான போர் நிறுத்தத்தை "உண்மையான மற்றும் நிரந்தரமான" ஒப்பந்தமாக மாற்ற வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் கூறினார் என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கு சீனாவின் முக்கிய பங்கை வெளிப்படுத்துகிறது, மேலும் உலகளாவிய எண்ணெய் விநியோக நிலைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
டிரம்பின் கச்சா எண்ணெய் அறிவிப்பு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ட்ரூத் சோஷியல் தளத்தில், "சீனா இனி ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரலாம். அவர்கள் அமெரிக்காவில் இருந்து நிறைய எண்ணெய் வாங்குவார்கள் என்று நம்புகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் சந்தைக்கு கொண்டுவருவதற்கு அனுமதிக்கிறது, அந்த அறிவிப்பு கச்சா எண்ணெய் விலைகளைக் குறைக்கலாம். இதேவேளையில் அமெரிக்காவின் S&P 500 குறியீடு உட்பட இதர முக்கிய குறியீடுகளும் 1 சதவீத அளவில் வளர்ச்சியில் உள்ளது.
ஹோர்முஸ் நீரிணை:
ஈரானின் கச்சா எண்ணெய் மீண்டும் சந்தைக்கு வருவதால், கச்சா எண்ணெய் விலைகள் குறையலாம், இது இந்தியாவின் பணவீக்க பாதிப்புகளை குறைக்கும். இதனால், விவசாயம், போக்குவரத்து, மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடும் வளர்ச்சி அடையலாம். இதோடு வங்கி மற்றும் உள்கட்டமைப்பு பங்குகள் நிலையான வளர்ச்சியை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஈரான் ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்முஸை மூடினால், எண்ணெய் விலை உயர்ந்து, இந்திய பங்குச் சந்தையில் சரிவை ஏற்படுத்தலாம்.
இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?:
இந்திய முதலீட்டாளர்கள் எண்ணெய் விலை மற்றும் போர் குறித்த தகவல்களையும், செய்திகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சீனாவின் ஆதரவு மற்றும் டிரம்பின் அறிவிப்பு, உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தலாம், ஆனால் இஸ்ரேல் - ஈரானின் எதிர்பாராத மாற்றங்கள் சந்தையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம்.
இத்தகைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை காப்பாற்றிக்கொள்ள முதலீடுகளை பன்முகப்படுத்த வேண்டும் அதாவது பல துறைகளில் பணத்தை பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!



Click it and Unblock the Notifications