பெய்ஜிங்: சீன அரசின் பயன்பாட்டிற்காக, மக்கள் பணத்தில் வாங்கும் பொருட்களில் பாதுகாப்பு காரணம் கருதி அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை வாங்க தடை வதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மவுசு குறையும் என ஆப்பிள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
சீன அரசு ஜூலை மாதம் வெளியிட்ட கொள்முதல் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மற்றும் மேக் புக்ஸ் சாதனங்களுக்கும் தடை வதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை இந்நிறுவனத்திற்கு எந்த விதமான தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆப்பிள் நிறுவனம்
இந்நிறுவனத்தின் வலிமைவாய்ந்த சந்தைகளில் சீனா நான்காம் இடத்தில் உள்ளது. இந்நிறுவன தயாரிப்புகளுக்கும் அரசின் இத்தகைய தடையால் சீன மக்களுக்கும் இந்நிறுவனத்தின் பாதுகாப்பு சார்ந்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் வியாபாரம் நடப்பு காலாண்டில் கண்டிப்பாக பாதிக்கும்.
ரஷ்யாவுக்கும் தடை
ஆப்பிள் நிறுவனம் மட்டும் அல்லாமல், சீன அரசு கணினி தகவல் பாதுகாப்புக்காக வாங்கும் ஆண்டி வைரஸ் சாப்ட்வேரை அமெரிக்காவின் சிமன்டெக் கார்ப் மற்றும் ரஷ்யாவின் காஸ்பர்ஸ்கி நிறுவனத்திடம் இருந்து வாங்கவும் தடை விதித்துள்ளது.
மைக்ரோசாப்ட் மற்றும் ஐபோன்
மேலும் இந்த பட்டியலில் முன்பு தடைவிதிக்கப்பட்ட விண்டோஸ் 8 மென்பொருளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எந்த விதிமான தடையும் விதிக்கப்படவில்லை.
பாதுகாப்பு
இன்றைய வாழ்கை முறையில் திருட்டு மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அடையாள திருட்டு, தகவல் திருட்டு, வங்கி தகவல் திருட்டும், ஸ்கிம்மிங், என பல வடிவங்களில் நம்முடைய தகவல்கள் திருடப்பட்டு வருகிறது. இதனை களைய நாம் உபயோகிக்கும் பொருட்களை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாத கையில் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications