ஒரு காலத்தில் 100 மெசேஜ்-க்குள் சேட்டிங் செய்து காதலை வளர்த்த சமுகம் வாட்ஸ்அப் வந்த பின்பு சேட்டிங், போட்ட ஷேரிங், வீடியோ கால், வாய்ஸ் நோட் என காதலை 360 கோணத்திலும் வளர்த்து வருகின்றனர். தனிநபர் சேட்டிங் தாண்டி ஆபீஸ் குரூப், பிஸ்னஸ் அக்கவுன்ட் என மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது இந்த வாட்ஸ்அப்.
இப்படிப்பட்ட வாட்ஸ்அப்-ஐ சீன அரசின் உத்தரவைத் தொடர்ந்து, சீனாவின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அமெரிக்க நிறுவனமான மெட்டா-வுக்கு (Meta) சொந்தமான வாட்ஸ்அப், த்ரெட்ஸ் (Threads) ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, அமெரிக்கா - சீனா இடையே ஏற்கனவே நிலவி வரும் வர்த்தக போரின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

சீனாவின் இணையக் கட்டுப்பாட்டு அமைப்பான சைபர்ஸ்பேஸ் நிர்வாகம் (Cyberspace Administration) தான் இந்த செயலிகளை நீக்குமாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் செயலிகளை நீக்குவதற்குத் தேசிய பாதுகாப்பு காரணங்கள் என கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் அறிக்கையின்படி, "சீன அதிபர் ஜி ஜிங்பிங்-கிற்கு எதிராக மக்களை தூண்டிவிடும் மற்றும் சீனாவின் இணைய பாதுகாப்பு சட்டங்களை மீறும் வகையிலான கருத்துக்கள் வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் செயலிகளில் காணப்பட்டதாகச் சீன அரசாங்கம் கண்டறிந்தது" என்று, இது குறித்து தகவல் அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் செயலிகள் சீனாவின் Great Firewall கட்டுப்பாடுகள் காரணமாக பெரிதாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை அமெரிக்கா - சீனா இடையேயான தொடர்ச்சியான தொழில்நுட்ப மோதலைக் காட்டுகிறது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலியைத் தடை செய்வதற்கான சட்டத்தை அமெரிக்கா கொண்டுவர முயற்சித்து வருகிறது. ஆனால், சீன தொழில்நுட்ப நிறுவனமான ByteDance நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி அமெரிக்காவில் மில்லியன் கணக்கானோரால் பயன்படுத்தப்படும் அதே சமயம், வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் போன்ற செயலிகள் சீனாவில் பெரிதாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
சீனாவில் அந்நாட்டினரால் உருவாக்கப்பட்ட வீசாட் (WeChat) செயலி தான் பிரதான மெசேஜிங் சேவை தளம். மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞர் போன்ற பிற செயலிகள் சீனாவில் பதிவிறக்கம் செய்யக் கிடைத்தாலும், கிரேட் ஃபயர்வால் கட்டுப்பாடுகள் காரணமாக அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை பல ஆண்டுகளாக உள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications