சிங்கப்பூர்: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தள்ளாடிக் கொண்டு இருக்கும் சீனா, கச்சா எண்ணெய் இறக்குமதியில்அமெரிக்காவை மிஞ்சியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனா எப்போதும் இல்லாத அளவிற்குக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது, இதனால் முதல்முறையாகக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்காவை சீனா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
சீனா
பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் உள்ள சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுஅதிகரித்துள்ளதாலும், தட்டுப்பாட்டை நீக்க அதிகவிலான இறக்குமதியைச் செய்து வருகிறது.
இது இந்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகள் என்று சொன்னால் மிகையாகது.
வட்டிக்குறைப்பு
குறைவான எண்ணெய் விலை மற்றும் தொடர் வட்டிக்குறைப்பு சீனாவை வளர்ச்சிப் பாதைக்குச் ஈடுச்செல்லும் எனச் சீனஅரசு நம்புகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதி
ஏப்ரல் மாதத்தில், சீனா ஒரு நாளில் 7.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதே காலகட்டத்தில்அமெரிக்க ஒரு நாளுக்கு 7.2 மில்லியன் பேரல் இறக்குமதி செய்துள்ளது.
முதல் இடம்
உலகிலேயே அதிகளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்துவந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் சீனா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அடுத்தச் சில மாதங்களுக்கு இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை சரிவு
கடந்த ஜூன் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் எண்ணெய் விலை 60 சதவீதம் அளவில் குறைந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications