தடுமாறிய சீனா.. இரண்டு வருடத்திற்கு பிறகு துளிர் விடும் விற்பனை.. இப்போதைய நிலவரம் என்ன?

உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக கருதப்படும் சீனாவில் கார் விற்பனையானது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மீள்ச்சி காண துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு புறம் கொரோனாவின் தாக்கம் டிசம்பர் மாத இறுதியில் தான் ஆரம்பித்திருந்தாலும், அதற்கு முன்பே அமெரிக்கா சீன வர்த்தகப் போரால் சீனா சற்று வீழ்ச்சி கண்டு இருந்தது உண்மையே.

இன்னும் இதனை தெளிவாக சொல்லவேண்டுமானால், உலக நாடுகளே இதனால் பொருளாதார சந்திப்பினை சந்திப்பதாக அப்போதைய அறிக்கைகள் கூறின.

விற்பனை அதிகரிப்பு

விற்பனை அதிகரிப்பு

இது குறித்து வெளியான பிசின்ஸ் டுடே செய்தியில், சீனாவின் வாகன விற்பனையானது கடந்த மே மாதத்தில் 14.5 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்றம் கண்டு வரும் வாகன விற்பனையானது, பொருளாதாரம் மீண்டு வருவதையே சுட்டி காட்டுகிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக முற்றிலும் தடை பட்டிருந்த, உலகின் இரண்டாவது பெரிய வாகன சந்தையானது தற்போது மீளத் தொடங்கியுள்ளது.

எவ்வளவு வாகனங்கள் விற்பனை?

எவ்வளவு வாகனங்கள் விற்பனை?

இதனை தெளிவாக காட்டும் விதமாக ஏப்ரல் மாதத்தில் வாகன விற்பனையானது 4.4 சதவீதம் ஏற்றம் கண்டு இருந்த நிலையில், மே மாதத்தில் 43 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே ஏப்ரல் மாதத்திற்கு முன்பு கொரோனாவினால் தேவையானது முடங்கி போயிருந்தது. இந்த நிலையில் மே மாதத்தில் 2.19 மில்லியன் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

விற்பனை அதிகரிக்க காரணம்

விற்பனை அதிகரிக்க காரணம்

இது குறித்து சீனா வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில், அரசின் தூண்டுதல் நடவடிக்கை மற்றும் நுகர்வோரின் நம்பிக்கை அதிகரிப்பால் மே மாதத்தில் விற்பனையை அதிகரித்தது என்றும் கூறியுள்ளது. இது குறித்து CAAMன் மூத்த அதிகாரி சென் ஷிஹூவா தனது ஆன்லைன் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறிது காலத்திற்கு முன்னேற்றம் பாதிக்கும்

சிறிது காலத்திற்கு முன்னேற்றம் பாதிக்கும்

எப்படி எனினும் வாகனத் துறையில் முன்னேற்றங்கள் என்பது சிறிது காலத்திற்கு பாதிக்கப்படும். ஏனெனில் உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக, உலகளாவிய தேவை பாதிக்கப்படக் கூடும். இதனால் சீனாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கான வெளிநாட்டு தேவையிலும் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

கடந்த ஆண்டு சரிவு தான்

கடந்த ஆண்டு சரிவு தான்

இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் புதிய எரிசக்தி வாகனங்களின் விற்பனை 11 வது மாதத்தில் 82,000 யூனிட்களாக சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த ஆண்டில் வாகன விற்பனையானது 15 - 25 சதவீதம் சரியலாம் என்று CAAM கணித்துள்ளது. மேலும் வாகனத் துறையில் நீண்டகால தேவையானது வீழ்ச்சியடையலாம் என்றும், இதனால் வாகன விற்பனையானது வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது.

சீனாவுக்கே இப்படின்னா? இந்தியாவின் நிலை?

சீனாவுக்கே இப்படின்னா? இந்தியாவின் நிலை?

இதே கடந்த ஆண்டு அமெரிக்கா சீன வர்த்தக யுத்தம் மோசமடைந்ததால் வீழ்ச்சி கண்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவிலேயே இப்படி எனில், வளரும் நாடான இந்தியாவில் வாகனத் துறையில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும்? ஏனெனில் சீனாவினை விட இருமடங்காக கொரோனாவின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள இந்தியா, பொருளாதாரத்திலும் சீனாவினை விட பின் தங்கியுள்ள நிலையில், இந்தியாவில் இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+