அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் பல வருடங்களாகத் தொடர்ந்து வரும் வேளையில், டொனால்டு டிரம்ப் ஆட்சி வரும் முன்பே சுதாரித்துக்கொண்டது. இதோடு செப்டம்பர் மாதம் அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைக்க இருக்கும் வேளையில் சீனா முந்திக்கொண்டது. சீனா பொருளாதாரத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் ஆசியச் சந்தையில் முக்கியமான மாற்றம் நடக்க உள்ளது.
சீனா அரசு அந்நாட்டின் மந்தமான பொருளாதாரத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, முக்கிய கொள்கை வட்டி விகிதத்தைச் சற்றும் எதிர்பாராத விதமாகக் குறைத்துள்ளது.

இதோடு உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சீனாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய கார்களை மாற்றி புதிய எலக்ட்ரிக் கார்களை மக்கள் வாங்குவதற்காக அளிக்கப்படும் மானியத்தையும் இரட்டிப்பாக்கியுள்ளது. இது சீனா எலக்ட்ரிக் வாகன சந்தையை பெரிய அளவில் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உள்ளது.
சீன மத்திய வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, ஒரு வருட கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் குறைத்து 2.3% ஆகக் குறைத்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோயால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதில் இருந்து அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய வட்டி விகிதக் குறைப்பு ஆகும்.
இதேபோல் 7 நாட்கள் கடன்களுக்கான வட்டி விகிதம் 1.7% ஆகக் குறைக்கப்பட்டது. இதற்கிடையில், அரசு வங்கிகள் தங்கள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. ஒரு வருட நிலையான வைப்புத்தொகைக்குச் செலுத்தப்படும் வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்து 1.35% ஆகக் குறைத்துள்ளதாகச் சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.
சீன மத்திய வங்கியின் முடிவு, வங்கிகளின் வைப்பு நிதி மீதான வட்டி விகித குறைப்பு ஆகியவை அந்நாட்டு மக்கள் மத்தியில் நுகர்வை அதிகரிப்பதற்குத் தான். கடந்த ஆண்டு மூன்று முறை வங்கிகள் வைப்புத்தொகை விகிதங்களைக் குறைத்தன. இது 2024 ஆம் ஆண்டிற்கான முதல் முறையாகும்.
வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தைக் குறைப்பது மூலம் மக்கள் வங்கியில் பணத்தை வெளியேற்றி அதை முதலீடு செய்வார்கள் அல்லது பொருட்களை வாங்குவார்கள், இது பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாட்டின் தொழில்துறை மற்றும் வீட்டு உபகரணங்களின் பங்கை மேம்படுத்த ஒரு திட்டத்திற்கு 41 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகச் சீனா முதல் முறையாக அறிவித்துள்ளது. இது அந்நாட்டின் உற்பத்தி சந்தை மற்றும் நுகர்வோர் சந்தையைப் பெரிய அளவில் மேம்படுத்த உள்ளது.
இதன் மூலம் சீனா வெளிநாட்டு வர்த்தகத்தைக் காட்டிலும் உள்நாட்டு நுகர்வு மூலம் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக புரிந்துகொள்ள முடியும். மேலும் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சியைப் பிடித்தால், சீனா மீதான அவரின் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications