உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும், இன்னும் வல்லரசு நாடு என்ற இலக்கை எட்ட முடியாமல் தவித்து வரும் சீனாவுக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் காத்திருக்கும் வேளையில் கொரோனா தொற்றுக்கு பின்பு ஏற்பட்டு உள்ள மந்தமான பொருளாதார வளர்ச்சியை மீட்டு எடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகள் அடுத்தடுத்து பணவீக்கத்தை குறைக்க பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்து வரும் வேளையில், சீனா தனது உள்நாட்டு நுகர்வை மேம்படுத்த வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

சீனாவில் தற்போது பெரும் பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி வருகிறது, சீன பொருளாதாரத்தில் 25 சதவீத பங்கீட்டை கொண்டு இருக்கும் இன்பராஸ்டக்சர், கட்டுமானம், ரியல் துறையின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான எவர்கிராண்டே அமெரிக்காவின் திவால் நீதிமன்றத்திள் சேப்டர் 15 அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மேலும் சீனாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, மானியம், பயன்பாட்டில் புதிய பிரச்சனை வெடித்துள்ளது.
இதற்கு மத்தியில் தான் கடந்த சில மாதங்களாக சீன மக்களின் நுகர்வு அளவுகள் பெரிய அளவில் குறைந்தும், உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டு ஏற்றுமதி அளவுகளும் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இதை சமாளிக்கும் வகையில் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
சீன நாட்டின் மத்திய வங்கியான பீப்பிள் பேங்க் ஆப் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந்நாட்டின் ஒரு வருட கடனுக்கான ப்ரைம் ரேட் 3.55 சதவீதத்தில் இருந்து 3.45 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல் 5 வருட கடனுக்கான ப்ரைம் ரேட் 4.2 சதவீதமாக குறைத்துள்ளது. இது ஜூன் மாத குறைப்பிற்கு பின்பு பதிவான வரலாற்று சரிவாகும்.
இந்த வரிகுறைப்பு மட்டும் அல்லாமல் அனைத்து வங்கிகளுக்கும் சீன அரசு அதிகப்படியான கடன்களை வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது சீன மக்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும் இதேபோல் சர்வதேச சந்தையில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் சீனாவின் வட்டி விகித குறைப்பு சீனாவுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் கட்டாயம் பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications