கொரோனா பீதியிலும் இப்படி ஒரு சலுகையா.. வழக்கம்போல் அமெரிக்காவுக்கு சீர் செய்த சீனா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில், தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்து வருவதால் அந்த நாட்டு அரசு ஒரு புதிய மருத்துவமனையையே திறந்துள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை வியாழக்கிழமையன்று 563 ஆக அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி ஒரு நிலையில் 20,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனுஷ்கா 23, விராட் கோலி 237.. மனைவியை விட 10 மடங்கு அதிகம்.. எதில் தெரியுமா?அனுஷ்கா 23, விராட் கோலி 237.. மனைவியை விட 10 மடங்கு அதிகம்.. எதில் தெரியுமா?

கட்டணம் குறைப்பு

கட்டணம் குறைப்பு

கொரோனாவின் தாக்கத்திற்கு பயந்து பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், உணவகங்கள், நிதி நிறுவனங்கள், தொழில் துறை, உற்பத்தி துறை என அனைத்தும் தங்களது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,717 தயாரிப்புகளுக்கு எதிராக விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை பாதியாகக் குறைப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

வரி குறைப்பு

வரி குறைப்பு

அமெரிக்காவின் கனவு நனவாகியுள்ளது என்றே கூறலாம். கடந்த ஒரு ஆண்டாகவே அமெரிக்கா சீனாவுக்கு இடையில் வர்த்தக போரே நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒர் ஆண்டாகவே சீனாவின் நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில், சில பொருட்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்களுக்கு 10% லிருந்து 5% ஆக கட்டணம் குறைக்கப்படும் என்றும், அதே நேரத்தில் சில பொருட்களின் கட்டணம் 5% இல் இருந்து 2.5% ஆக குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும்
 

பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும்

சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக உடன்படிக்கைக்கு கட்டுபட்டும், சந்தை நம்பிக்கையை அதிகரிக்கவும், உலக பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும், இதை செயல்படுத்த முடியும் என்றும் சீன அமைச்சகம் தெரிவித்துள்ளது. சில ஆய்வாளர்களின் வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து அமெரிக்கா பொருட்களின் சோயாபீன்ஸ் மற்றும் கச்சா எண்ணெய் போன்ற சில கட்டணங்களை சீனா திரும்ப பெற வேண்டியிருக்கும் என்று கூறியது.

இது தான் வர்த்தகம்

இது தான் வர்த்தகம்

நாட்டில் கொரோனாவின் தாக்கம் தலைக்குமேலே சென்று கொண்டிருந்தாலும், நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு கொண்டிருந்தாலும், சீனா வர்த்தக ஒப்பந்தத்தை சரியான முறையில் நிறைவேற்ற, சொன்னது போல கட்டண குறைப்பை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த கட்டண குறைப்பின் மூலம் எவ்வளவு தொகை தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று சீனா கூறவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China cut halve tariffs on 1717 American products

China’s finance ministry said that tariff reductions for American goods. But the ministry did not state the value of the goods, and that's not mention to falls revenue.
Story first published: Thursday, February 6, 2020, 17:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X