அமெரிக்கச் சந்தைடில் சீனா முதலீடு செய்வது கடந்த 5 மாதங்களாகப் பெரும் அளவில் குறைந்து வருவதாகத் தரவுகள் கூறுகின்றனர். உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த இரண்டு நாடுகளிலும் பெரிய அளவில் வர்த்தகப் போர் நிகழ்ந்து வருவதையே இது காட்டுகிறது.
சீனாவில் இருந்து அமெரிக்காவில் 1.8 பில்லியன் டாலர் மட்டுமே 2018 ஜனவரி - மே மாதம் காலங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 92 சதவீத சரிவு என்றும், கடந்த 7 ஆண்டுகளில் மிகக் குறைவு என்று தெரிவித்துள்ளனர்.
சீன கார்ப்ரேட் நிறுவனங்கள்
சீன கார்ப்ரேட் நிறுவனங்கள் 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் 46.5 பில்லியன் டாலர் முதலீடு செய்து இருந்த நிலையில் அமெரிக்க அதிபராக டிரம்ப் தலைமை ஏற்ற பிறகு 2017-ம் ஆண்டு 36 சதவீதம் சரிந்து 29.7 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்துள்ளது.
அமெரிக்கா
சீனா மீது அமெரிக்கா பொருளாதார ரீதியாகத் தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகளின் பிரதிபலிப்பே இது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
வரி உயர்வு
அன்மையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீதான வரியினை அமெரிக்க 25 சதவீதம் உயர்த்திய நிலையில் அடுத்தக் கட்டமாக 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீது 10 சதவீத கூடுதல் வரியினையும் வித்துள்ளது.
நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகள்
டிரம்ப் தலைமையிலான அரசு சீனா மற்றும் இந்திய வர்த்தகக் கொள்கைகள் நியாயமற்றதாக இருக்கின்றது என்று குற்றம்சாட்டி வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே அதிகப்படியாகச் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியினை உயத்தியுள்ளது ஆகும்.
சீனா மற்றும் இந்தியா
அமெரிக்காவின் இந்த வரி உயர்வு வர்த்தகக் கொள்கைகளை எதிர்க்கும் நோக்கத்தில் சீனா மற்றும் இந்திய அரசுகளும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியினை உயர்த்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications