அமெரிக்க பொருளாதாரம், டாலர் மதிப்பை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அந்நாட்டின் அரசு பத்திரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு சீனா விற்பனை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
உதாரணமாக அமெரிக்க - ஜப்பான் மத்தியிலான வர்த்தகத்தை லாபகரமாக வைக்க அதன் நாணய மதிப்பை நிலையாக வைத்திருக்க வேண்டும், இதனால் ஜப்பான் அமெரிக்க பத்திரங்களை வாங்கி அதன் மதிப்பை தொடர்ந்து நிலையாக வைத்திருக்கும். இதேபோல தான் ஐரோப்பா, பிரிட்டன், இந்தியா என அனைத்து நாடுகளும் செய்து வருகிறது. ஆனால் சீனா தனது நாணயத்தின் மதிப்பை கட்டுப்படுத்த மாற்று முறையை கையில் எடுத்துள்ளது.

சீனா தனது அன்னிய செலாவணி இருப்பை பல்வகைப்படுத்தும் முயற்சியில் 2025ல் தீவிரமாக இருந்தது, இதன் ஒரு பகுதியாக அமெரிக்க கருவூல பத்திரங்களை தொடர்ந்து விற்பனை செய்து, 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளது. இது அமெரிக்க பொருளாதாரத்திற்கும், டாலர் மதிப்புக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுமுனையில் சீனா அமெரிக்க கருவூல பத்திரத்திற்கு பதிலாக தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்தது.
சமீபத்தில் அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்ட தரவின்படி, நவம்பர் 2025-ல் சீனாவின் அமெரிக்க ட்ரெஷரி பத்திர இருப்பு 682.6 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் இது 688.7 பில்லியன் டாலராக இருந்தது. இந்த 682.6 பில்லியன் டாலர் அளவு என்பது 2008-க்குப் பிறகு பதிவான மிகக் குறைவான அளவாகும்.
2025ல் ரெசிப்ரோக்கல் வரி, அபராத வரி என டிரம்ப் அரசு சீனாவுக்கு அடித்தடுத்து பல நெருக்கடியை கொடுத்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியிலான பதற்றம் அதிகரித்து, சீனா தனது அன்னிய செலாவணி இருப்பை அமெரிக்க கருவூல பத்திரத்திற்கு பதிலாக தங்கம், வெளிநாட்டு பங்கு முதலீடுகள் மற்றும் அமெரிக்கா அல்லாத நாணயங்களுக்கு மாற்றி வருகிறது. இந்தக் குறைப்பு சீனாவின் நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. இதனால் இனி வரும் காலத்திலும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் அமெரிக்காவின் கடன் அளவும், ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டிய வட்டியும் பெரும் அச்சுறுத்தாலாக இருக்கும் காரணத்தால் அந்நாட்டின் பொருளாதாரம் ஆபத்தில் இருப்பதாக பல கணிப்புகள் வெளியான நிலையில், சீனா அமெரிக்க அரசு பத்திரங்களை விற்பனை செய்துள்ளதாகவும் கருத்து நிலவுகிறது. ஆனால் இதேவேளையில் ஜப்பான் மற்றும் பிரிட்டன் தங்கள் இருப்பை அமெரிக்க கருவூல பத்திரத்தில் அதிகரித்துள்ளன.
ஜப்பான் இருப்பு 2.6 பில்லியன் டாலர் உயர்ந்து 1.2 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டன் வைத்திருப்பு 10.6 பில்லியன் டாலர் உயர்ந்து 888.5 பில்லியன் டாலராகவும் உள்ளது.
உலகிலேயே அதிகப்படியான அன்னிய செலாவணி கையிருப்பு வைத்திருக்கும் நாடு சீனா, டிசம்பர் 2025 இறுதியில் சீனாவின் Forex 3.3579 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்த கையிருப்பை பல்வகைப்படுத்துவதற்கு அமெரிக்க கருவூல பத்திரத்தை கைகழுவிடிட்டு சீனா தங்கம், அமெரிக்கா அல்லாத நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு பங்கு முதலீடுகளை அதிகரித்து வருகிறது.
சீனாவின் மத்திய வங்கியான People's Bank of China வெளியிட்ட சமீபத்திய தரவின்படி, டிசம்பர் 2025 இறுதியில் சீனாவின் தங்க இருப்பு 74.15 மில்லியன் அவுன்ஸ் (2102.11 டன்) ஆக உள்ளது. இது நவம்பர் மாதத்தை விட 30,000 அவுன்ஸ் அதிகமாகும். சீனா தனது கருவூலத்தில் தொடர்ச்சியாக 14வது மாதமாக தங்க இருப்பை அதிகரித்து வருகிறது.
இந்த நடவடிக்கை மூலம் சீனாவின் தனது நாணயத்தின் மதிப்பையும், நிதி இருப்பையும் தங்கத்தின் வாயிலாக மேம்படுத்த முடிவு செய்துள்ளது. சீனாவின் இந்த முடிவு மற்ற நாடுகளுக்கும் முக்கியமான உதாரணமாக மாறி வரும் வேளையில் அமெரிக்காவுக்கும், அமெரிக்க கருவூல பத்திரத்திற்கும், டாலர் மதிப்புக்கும் பெரும் ஆபத்து.
இதேபோல் கிரீன்லாந்து விஷயத்தில உலக நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் வேளையில், ஐரோப்பிய நாடுகள் தனது பத்திர இருப்பை மொத்தமாக விற்பனை செய்வதாக மிரட்டினாலே போதும் டிரம்ப் தனது திட்டத்தில் பின்வாங்கிவிடுவார் என்ற கருத்தும் சமூக வலைத்தளத்தில் உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications