அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் குறைந்திருந்தாலும், டிரம்ப் அரசு பல வகையில் சீனாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஆனால் இந்த முட்டுக்கட்டைய தொடர்ந்து உடைத்து வருகிறது சீனா. இதேபோல் ஏஐ துறை வளர்ச்சியிலும், கம்பியூட்டர் உள்கட்டமைப்பு துறையிலும் எந்த நாட்டையும் நம்பாமல் சுய சார்புடன் இருக்க வேண்டும் என்பதில் சீனா தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.
அப்படி சமீபத்தில் சீனாவின் ஏஐ துறை வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது, ஏஐ சிப் மற்றும் கம்யூட்டர் இயக்கத்தை வேகப்படுத்த பயன்படுத்தப்படும் DRAM (DDR4). இவ்விரண்டுக்கும் சந்தையில் டிமாண்ட் அதிகமாக உள்ளது, இதேபோல் இதற்கான தொழில்நுட்பம் சீனாவுக்கு உலக நாடுகள் மறுத்து வருகிறது.

இந்த நிலையில் ஏஐ சிப் தயாரிப்பதற்காக போட்டோலித்தோகிராபி தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக சமீபத்தில் சீனா அறிவித்த நிலையில், அடுத்த அதிரடியை சீனா அறிவித்துள்ளது.
ஏஐ உட்பட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தேவையான DRAM தயாரிப்பில் சீனா சாதனை படைத்துள்ளது. ஏஐ டிமாண்ட் காரணமாக 2025ல் மிகப்பெரிய அளவில் விலை உயர்ந்த DRAM-ஐ சீனா குறைந்த விலைக்கு தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
சீனாவின் மெமரி சந்தை, உலக சந்தையிலிருந்து தனித்து, உயர்ந்து நிற்கிறது. சீன சிப்மேக்கர் CXMT நிறுவனத்தின் (ChangXin Memory Technologies) புதிய 32GB DDR4 ரேம் மாட்யூல் அந்நாட்டில் வெறும் 138 டாலருக்கு விற்பனையாகி வருகிறது. தற்போது உலக அளவில் DDR4 ரேமின் சராசரி விலை 300 முதல் 400 டாலர் வரை உள்ளது.
AI மற்றும் டேட்டா சென்டர் தேவை அதிகரிப்பால் நுகர்வோர் பொருட்களுக்கான DDR4 ரேம்களை தயாரிப்பதில் இருந்து கொரியா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் விலகி சென்றுள்ளது. 2025 போலவே 2026ஆம் ஆண்டிலும் DRAM விலை உயரும் என்று தொழில்துறை கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சாம்சங், SK ஹைனிக்ஸ், மைக்ரான் போன்ற பெரிய உற்பத்தியாளர்கள் DDR4/DDR5 உற்பத்தியை HBM (High Bandwidth Memory) மற்றும் அதிக பேண்ட்வித் சர்வர் DRAM-க்கு மாற்றியுள்ளனர். NVIDIA மற்றும் கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா போன்ற ஹைப்பர்ஸ்கேலர் டேட்டா சென்டர்களை உருவாக்கும் நிறுவனங்களிடம் HBM-க்கு அதிக டிமாண்ட் இருக்கும் காரணத்தாலும், இதற்கு லாபம் அதிகம் கிடைப்பதாலும், இதற்கு தாவியுள்ளது. இதனால் DDR4 போன்ற பழைய தொழில்நுட்பங்களில் சப்ளை குறைந்து விலை உயர்கிறது.

சீனாவில் CXMT இந்த இடைவெளியை நிரப்பி கல்லாகட்டி வருகிறது. அமெரிக்காவின் மேம்பட்ட சிப்மேக்கிங் கருவிகளை வாங்க முடியாததால், CXMT பழைய தொழில்நுட்பங்களான DDR4 மற்றும் ஆரம்ப DDR5 உற்பத்தியில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளது. இதனால் உலகளவில் விலை உயரும் போது சீனாவில் மலிவான விலையில் DDR4 கிடைக்கிறது. இது அந்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, ஏஐ துறை வளர்ச்சியை வேகப்படுத்தும்.
இதற்கிடையில் ஏஐ அலை முடிந்துவிட்டால் மீண்டும் சாம்சங், SK ஹைனிக்ஸ், மைக்ரான் போன்ற கொரியா - அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் DDR4/DDR5 உற்பத்தியை அதிகரிக்கும். அப்போது சீனா இதில் ஆதிக்கம் செலுத்தி இந்த 3 நிறுவனங்களின் வர்த்தகத்தை முடக்கும்.
இதனால் இந்த பிரிவிலும் அமெரிக்க நிறுவனங்களை சீனா ஓரம் கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!



Click it and Unblock the Notifications