சீனாவின் சூட்சும தந்திரம்! இந்தியாவுக்கும் சிக்கல்! 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் அமெரிக்கா எப்படி, சர்வதேச அளவில் பல நாடுகளையும் தன் பக்கம் வளைத்து வைத்திருக்குமோ, அப்படி இன்று சீனா பல நாடுகளை நட்பு, பணம், அதிகாரம், தந்திரம் என பல வழிகளில் தன் கையில் பிடித்து வைத்திருக்கிறது.

பாகிஸ்தானை நட்பு ரீதியாகவும், எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கணக்கிலும் தன் நட்புக் கரத்தை நீட்டிக் கொண்டு இருக்கிறது சீனா.

ஹாங்காங், திபெத் போன்ற நாடுகளை தன் அதிகார பலத்தால், தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இருக்கிறது.

பண பலம்
 

பண பலம்

உலகில் சுமாராக 68 நாடுகளை, சீனா, தன் பண பலத்தால் வளைத்துப் போடும் இடத்தில், ஒரு பண வலையை விரித்து இருக்கிறது என, ஆசியா.நிக்கி பத்திரிகைச் செய்திகள் சொல்கிறது. இந்த 68 நாடுகளை எப்படி பண பலத்தால், தன் பக்கம் இழுக்கிறது அல்லது தன் கையில் வைத்திருக்கிறது? இதனால் சீனாவுக்கு என்ன பலன்? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

பண வலை என்பது கடன் வலை

பண வலை என்பது கடன் வலை

உலகில் வளர்ந்து வரும் 68 நாடுகளுக்கு சீனா தாராளமாக கடன் கொடுத்து இருக்கிறதாம். அப்படி என்ன பெரிதாக கடன் கொடுத்துவிட்டது என்று கேட்டால் உலக வங்கி இந்த 68 நாடுகளுக்கு கொடுத்து இருக்கும் கடன் அளவுக்கு கொஞ்சம் குறைவாக கொடுத்து இருக்கிறார்களாம்.

உலக வங்கிக்கு சமமாக சீனா

உலக வங்கிக்கு சமமாக சீனா

2018-ம் ஆண்டு கணக்குப் படி, உலக வங்கி இந்த 68 வளரும் நாடுகளுக்கு கொடுத்திருக்கும் கடனில், பாக்கி நிலுவைத் தொகை (balance of lending), சுமாராக 103 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இதுவே சீனாவுக்கு, இந்த நாடுகள் கொடுக்க வேண்டிய பாக்கி கடன் தொகை (balance of lending) சுமாராக 101 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கொடுத்து இருக்கிறார்களாம்.

கடன் வளர்ச்சி
 

கடன் வளர்ச்சி

இந்த 68 நாடுகள், ட்ராகன் தேசத்துக்கு கொடுக்க வேண்டிய கடன் பாக்கி தொகை கடன் 4 ஆண்டுகளில் 90 % அதிகரித்து இருக்கிறது. அதாவது, சீனா இந்த 68 நாடுகளுக்கு, கடந்த 4 ஆண்டுகளில், கூடுதலாக கடன் கொடுத்து இருக்கிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் கணக்கு என்ன?

IMF & உலக வங்கி

IMF & உலக வங்கி

உலக வங்கிக்கு, இந்த 68 நாடுகள் கொடுக்க வேண்டிய பாக்கி தொகை கடந்த 4 ஆண்டுகளில் 40 % தான் அதிகரித்து இருக்கிறதாம். சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் கணக்கு இதை விட குறைவு. கடந்த 4 ஆண்டுகளில் 10 % தான் அதிகரித்து இருக்கிறது. ஆக இந்த இரண்டு உலக நிதி அமைப்புகளும், 68 வளரும் நாடுகளுக்கும் அதிகம் கடன் கொடுக்கவில்லை. சரி சீனா எவ்வளவு கடன் கொடுத்து இருக்கிறது? சீனாவின் சொல் பேச்சைக் கேட்கும் அளவுக்கு அதிகம் கடன் கொடுத்து இருக்கிறார்களா என்ன?

எவ்வளவு கடன் ஜிடிபி - சீன கடன்

எவ்வளவு கடன் ஜிடிபி - சீன கடன்

இந்த 68 வளரும் நாடுகளில் 26 நாடுகள், தங்களின் மொத்த ஜிடிபியில் 5 %-க்கு மேலான அளவுக்கு, கடன் தொகையை சீனாவுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டி இருக்கிறது. 14 நாடுகள், தங்களின் மொத்த ஜிடிபியில் 10 % அளவுக்கு கடன் தொகையை சீனாவுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கிறதாம். டிஜிபூட்டி (Djibouti) என்கிற நாடு தன் மொத்த ஜிடிபியில் 39 % அளவுக்கு சீனாவுக்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமாம்.

சீனாவை நம்பும் நாடுகள்

சீனாவை நம்பும் நாடுகள்

இன்று கொரோனா வைரஸ் பிரச்சனையால் பொருளாதார ரீதியாக பலத்த அடி வாங்கிக் கொண்டு இருக்கும் பல வளரும் நாடுகளும், சீனாவின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறார்களாம். அந்த அளவுக்கு, சீனாவின் கடன், பல நாடுகளுக்கு அத்தியாவசியமாக மாறிவிட்டது. பழகிவிட்டது. சீனாவும் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறது.

வட்டி விகித கணக்கு

வட்டி விகித கணக்கு

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால், உலக வங்கியை விடவோ அல்லது IMF அமைப்பை விடவோ, சீனா அதிக வட்டி வசூலிக்கிறார்களாம். உலக வங்கி 1% வட்டி வசூலிக்கிறார்களாம். IMF 0.6 % வட்டி வசூலிக்கிறார்களாம். ஆனால் சீனா 3.5 % வட்டி வசூலிக்கிறார்கள். இருப்பினும் வளரும் நாடுகள் சீனாவிடம் கடன் வாங்க என்ன காரணம்?

ஏன் உலக வங்கி & IMF கடன் அதிகரிக்கவில்லை

ஏன் உலக வங்கி & IMF கடன் அதிகரிக்கவில்லை

உலக வங்கி மற்றும் IMF போன்ற அமைப்புகளிடம் கடன் வாங்க வேண்டும் என்றால், அந்த அமைப்புகள் சொல்லும் பல்வேறு விதிகளைப் பின்பற்ற வேண்டும். அதை கடை பிடிக்கவில்லை என்றால் அடுத்தடுத்த கடன் தவணைகள் ரத்தாகலாம். ஆனால் சீனாவில் இருந்து வரும் கடன்களில் எந்த விதிகளும் இருக்காதாம்.

சீனாவுக்கு என்ன லாபம்

சீனாவுக்கு என்ன லாபம்

சுமாராக 101 பில்லியன் டாலர் கடனை, இன்னும் இந்த வளரும் நாடுகள், சீனாவுக்கு கொடுக்க வேண்டி இருக்கிறது என்று பார்த்தோம். இதனால் சீனா என்ன பலன் அடைந்தது..? இவ்வளவு கோடி கணக்கில் கொட்டிக் கொடுக்கும் இந்த நாடுகள் சீனாவுக்கு திருப்பிச் செய்வது என்ன?

சீனாவுக்கு கிடைக்கும் பலன்கள்

சீனாவுக்கு கிடைக்கும் பலன்கள்

சீனாவின் கடன் வலையில் சிக்கித் தவிக்கும் நாடுகள், சீனாவின் வெளி உறவுக் கொள்கை மற்றும் ராஜ தந்திர நடவடிக்கைகளில் ஆதரவு கொடுக்கிறார்கள். சொல்லப் போனால் ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இதை எல்லாம் தியரியாக சொல்லலாம், உண்மையில் நடந்து இருக்கிறதா? ஏதாவது சம்பவத்தைச் சொல்ல முடியுமா

நிஜ எடுத்துக்காட்டு

நிஜ எடுத்துக்காட்டு

ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்ட பிரச்சனைகளை நாம் அறிவோம். இந்த ஹாங்காங் பிரச்சனை குறித்து United Nations Commission on Human Rights நடத்திய கூட்டத்தில், சீனாவிடம் கடன் வாங்கி இருக்கும் 68 நாடுகளில், 14 நாடுகள், ஹாங்காங் பிரச்சனையில் சீனாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்களாம். ஆக சீனாவின் கடன், அவர்களுக்கு வட்டியை சம்பாதித்துக் கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் சர்வதேச அரங்கில் பல நாட்டின் ஆதரவுகளையும் சம்பாதித்துக் கொடுக்கிறது.

இந்தியாவுக்கு தலைவலி

இந்தியாவுக்கு தலைவலி

இந்தியாவின் தென் திசையில், இருக்கும் முக்கிய நாடு இலங்கை. இலங்கைக்கும், சீனா கடுமையாக கடன் கொடுத்தது. இலங்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்ற உடன், கடந்த 2017-ம் ஆண்டு, சீனாவுக்கு, ஹம்பந்தொட்டா (Hambantota) துறைமுகத்தை, 99 ஆண்டு காலத்துக்கு, குத்தகைக்கு கொடுத்துவிட்டது. இது இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் செயல்.

சீனாவின் சூட்சும தந்திரம்

சீனாவின் சூட்சும தந்திரம்

இப்படி, சீனா தன் பண வலையை கடன் வலையாக விரித்து, பல நாடுகளை அதில் சிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் செய்வதறியாமல் இருக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால், சீனா இந்த கடன் வலையை வைத்தே உலகில் பாதி நாடுகளை தன் கைக்குள் கொண்டு வந்துவிடும் போலிருக்கிறதே! இனியாவது உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் விழித்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China Debt Diplomacy 68 developing countries heavily indebted to china

The dragon nation china has been using its debt trap on 68 developing countries to increase their global influence. The 68 nations also heavily indebted.
Story first published: Friday, August 7, 2020, 18:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X