உலகின் பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிகப்படியான ராணுவ பட்ஜெட்டைக் கொண்டிருக்கும் சீனா முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அதன் போட்டி நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை சீனா வெளியிட்ட வருடாந்திர பட்ஜெட்டில் அந்நாட்டின் ராணுவ பட்ஜெட் அளவீட்டைக் கடந்த ஆண்டை காட்டிலும் 7.2% அதிகப்படியான தொகையை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கிட்டத்தட்ட 7 சதவீதம் ராணுவ பட்ஜெட்-ஐ அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கு 1.6 டிரில்லியன் யுவான் அதாவது 18.78 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

சீனாவின் ராணுவ பட்ஜெட் அதிகரிப்பு அமெரிக்கா, தைவான், ஜப்பான் நாடுகளுக்குக் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. சீனா - தைவான் பிரச்சனை வருடக்கணக்கில் இருந்து வரும் வேளையில், அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் சீனாவின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் போரில், உக்ரைன் நாட்டுக்கான உதவிகளை அதன் நட்பு நாடான அமெரிக்கா மெல்ல மெல்ல குறைத்து வருகிறது. இதைவிட முக்கியமாக உக்ரைனுக்கான பெரும் நிதியுதவி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் இந்த 18.78 லட்சம் கோடி ரூபாய் ராணுவ பட்ஜெட் மூலம் அந்நாடு ராணுவ தொழில்நுட்பத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்யும். இதன் மூலம் ஹைய் டெக் தொழில்நுட்பம் முதல் கண்ணுக்குத் தெரியாத போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள், அணு ஆயுதக் களஞ்சியம் வரை மேம்பட்ட ராணுவ திட்டங்களுக்கு நிதியுதவி செய்ய வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்திர கூட்டத்தின் தொடக்கக் கூட்டத்தில், அறிவிக்கப்பட்ட இந்த அதிகாரப்பூர்வ பட்ஜெட் அறிக்கையில் ராணுவ பட்ஜெட்-க்கு 1.6 டிரில்லியன் யுவான் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6வது முறையாகத் தாக்கல் செய்த தனது பட்ஜெட்டில் அறிவித்த முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்ற துறை பாதுகாப்புத் துறை தான்.
மத்திய அரசு கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், தற்போது 4 சதவீத உயர்வில் ரூ.6.25 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications