சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட டிரம்ப்.. கனவுல கூட நினைக்கல.. கேப்பில் கெடா வெட்டிய சீனா..!

சீனா உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும், அமெரிக்காவிடம் இருந்து தொடர்ந்து 12 ஆண்டுகளாகக் கடுமையாக எதிர்ப்பும், முட்டுக்கட்டையும் எதிர்கொண்டு வருகிறது. செமிகண்டக்டர் சிப் முதல் டெக்ஸ்டைல் ஏற்றுமதி வரையில் அனைத்திலும் கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனா மீது விதித்து வருகிறது.

ஆனாலும் சீனா எதற்கும் அடிபணியாமல் தடைகளை உடைத்துத் தொடர்ந்து முன்னேறி வரும் வேளையில் முக்கியமான மாற்றம் ஒன்று நடந்துள்ளது. ஆம் தென்கிழக்கு ஆசியாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சீனா தனது வர்த்தகம் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை அதிகரித்து அமெரிக்காவை ஓடவிட்டுள்ளதாகக் கள ஆய்வுகள் கூறுகிறது.

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட டிரம்ப்.. கனவுல கூட நினைக்கல.. கேப்பில் கெடா வெட்டிய சீனா..!

ஆஸ்திரேலியா நாட்டின் லோவி இன்ஸ்டியூட் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும், சீனா யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னேறியுள்ளது என இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு ஆசியா என்பது 11 நாடுகள் கொண்ட பகுதி, இதில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர்-லெஸ்டே மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளது.

இப்பகுதி வர்த்தகம், பாதுகாப்பு, நிர்வாகம் ஆகியவற்றில் காலம் காலமாக அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கத் துவங்கியுள்ளது என லோவி இன்ஸ்டியூட் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை இழக்க மிக முக்கியமான காரணமாக இருப்பது டொனால்டு டிரம்ப் தான் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையில் டிரம்ப் ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட வரி, நிதி உதவி குறைப்பு மற்றும் விசா கட்டுப்பாடுகள் தான் இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணம் என தெரிவித்துள்ளது. புதன்கிழமை லேவி இன்ஸ்டியூட் தென்கிழக்கு ஆசியாவின் இன்புளூயன்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்டது, இந்த குறியீடு இப்பகுதியின் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அரசியல் ஆதிக்கம் மற்றும் கலாச்சார ஆதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு வெளியிடும்.

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட டிரம்ப்.. கனவுல கூட நினைக்கல.. கேப்பில் கெடா வெட்டிய சீனா..!

இந்த குறியீட்டின் மூலம் இப்பகுதியில் அமெரிக்கா ஓரம்கட்டப்பட்டு சீனா பெரும் ஆதிக்கத்தைப் பிடித்துள்ளதை உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளது. இதோடு முக்கியமாக 11 நாடுகளில் கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

உதாரணமாக வர்த்தக அளவுகளில் பார்த்தால் தென்கிழக்கு ஆசியாவின் 11 நாடுகளின் மொத்த ஏற்றுமதியில் சீனா 20 சதவீதமும், இறக்குமதியில் 26 சதவீதமும் பங்கீடு வகிக்கிறது. ஆனால் அமெரிக்கா வெறும் 16 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கிறது. அதிலும் கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மார் சீனாவின் ஆதிக்கம் 60 முதல் 150 சதவீதம் வரையில் பங்கீடு வகிப்பதாக லோவி ஆய்வறிக்கை கூறுகிறது.

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட டிரம்ப்.. கனவுல கூட நினைக்கல.. கேப்பில் கெடா வெட்டிய சீனா..!

இதேபோல் முதலீட்டு அளவில் பார்க்கும் போது 2015 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்த 11 நாடுகளில் வந்த புதிய முதலீடுகளில் சுமார் 21 சதவீதம் சீனா பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பார்க்கும் போது இது 16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பகுதி முதலீட்டில் பெருமளவு ஆதிக்கம் செலுத்திய நாடு என்றால் ஜப்பான், தற்போது ஜப்பானின் ஆதிக்கமும் தென்கிழக்கு ஆசியச் சந்தையில் மாயமாகியுள்ளதும் இந்த அறிக்கை காட்டுகிறது.

இந்த 11 நாடுகள் அடங்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமெரிக்கத் தனது ஆதிக்கத்தை இழக்க முக்கிய காரணமாக இருந்தது டிரம்பும், அவர் விதித்த வரியும், கட்டுப்பாடுகளும் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+