உலக நாடுகளை பயமுறுத்தும் சீனா எவர்கிராண்டே.. 305 பில்லியன் டாலர் கடன்.. முழு விபரம்..!

எவர்கிராண்டே சீனா-வின் 2வது பெரிய ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான சேவை நிறுவனம், ஒரு காலத்தில் சீனாவின் மிகப்பெரிய வீடு விற்பனை நிறுவனமாக மட்டும் அல்லாமல் சீனாவில் வீட்டு வசதிகள் துறையில் முன்னோடியாக இருந்தது. ஆனால் தற்போது அதிகளவிலான கடன் மற்றும் வர்த்தக சரிவு என மொத்த நிறுவனமும் திவாலாகும் நிலையில் உள்ளது.

எவர்கிராண்டே திவாலாகும் நிலையில் இருக்கும் காரணத்தால் சீனா, ஹாங்காங் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தைகளும் சரிந்துள்ளது. இதனால் உலகின் டாப் 500 பணக்காரர்கள் மட்டுமே 135 பில்லியன் டாலரை இழந்துள்ளனர்.

அப்படி எவர்கிராண்டே எவ்வளவு தொகையைக் கடனாக வைத்துள்ளது..?

 எவர்கிராண்டே நிறுவனம்

எவர்கிராண்டே நிறுவனம்


1996ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எவர்கிராண்டே நிறுவனம் சீனாவில் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த காலகட்டத்தில் அதிகளவிலான தொகையை வங்கியில் இருந்து கடன் வாங்கிக் கட்டிடங்களைக் கட்டி வர்த்தகம் செய்து வந்தது. இதனால் வேகமாக வளர்ந்து வந்தது.

 305 பில்லியன் டாலர் கடன்

305 பில்லியன் டாலர் கடன்

ஆனால் காலப்போக்கில் சரியாக நிர்வாகம் செய்யாத காரணத்தாலும், சீன அரசின் பல்வேறு உத்தரவுகளால் எவர்கிராண்டே நிறுவனத்தின் கடன் அளவு சுமார் 2 டிரில்லியன் யுவான் அதாவது 305 பில்லியன் டாலர் அளவிலான கடன் வைத்துள்ளது. இந்த நிறுவனம் திவாலானால் சீன ரியல் எஸ்டேட் சந்தை மட்டும் அல்லாமல் சீனா, ஹாங்காங் பங்குச்சந்தை பெரும் விளக்க முடியாத பாதிப்பை எதிர்கொள்ளும்.

 சீன அரசு உத்தரவுகள்

சீன அரசு உத்தரவுகள்

சீன அரசு கடன் சுமையைக் குறைக்கவும், மக்களுக்கு மலிவான விலையில் வீடுகளை அளிக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த சில வருடத்தில் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த கடன் மற்றும் நிலம் வாங்குவதில் 100க்கும் அதிகமான கடுமையான விதிமுறைகளை விதித்தது. இக்காரணத்தால் எவர்கிராண்டே-வின் வர்த்தகம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு தற்போது கடனில் மூழ்கியுள்ளது.

 லேமன் பிரதர்ஸ்

லேமன் பிரதர்ஸ்

எவர்கிராண்டே நிறுவனத்தைச் சீனா அரசால் காப்பாற்ற முடியவில்லை எனில் 2008ல் அமெரிக்காவில் லேமன் பிரதர்ஸ் திவால் மூலம் சர்வதேச பொருளாதாரம் எந்த அளவிற்குப் பாதித்ததோ அதைவிடவும் பெரிய பாதிப்பை தற்போது எதிர்கொள்ள நேரிடும் எனச் சர்வதேச சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 11 வருட சரிவு

11 வருட சரிவு

இதன் எதிரொலியாக எவர்கிராண்டே நிறுவன பங்குகள் 11 வருட சரிவைப் பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்திலும் சரிவை சந்தித்த எவர்கிராண்டே பங்குகள் வெறும் 2.27 ஹாங்காங் டாலர் வரையில் சரிந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் எவர்கிராண்டே பங்கு மதிப்பு 83.95 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

 SINIC ஹோல்டிக்ஸ்

SINIC ஹோல்டிக்ஸ்

எவர்கிராண்டே எதிரொலியால் சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான SINIC ஹோல்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்புத் திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் 87 சதவீதம் சரிந்து வெறும் 0.50 ஹாங்காங் சென்ட் அளவிற்குச் சரிந்தது.

 சீன மக்கள் வங்கி

சீன மக்கள் வங்கி

சீன அரசு உத்தரவின் படி சீன மக்கள் வங்கி சுமார் 14 பில்லியன் டாலர் அளவிலான தொகையை எவர்கிராண்டே நிறுவனத்தில் குறுகிய கால முதலீடாகக் கடந்த வாரம் அளித்தது. ஆனாலும் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை.

 யாருக்கெல்லாம் பாதிப்பு

யாருக்கெல்லாம் பாதிப்பு

எவர்கிராண்டே 305 பில்லியன் டாலர் கடனுடன் திவாலானால் இந்த நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள், இந்நிறுவனத்தில் முதலீடு செய்த தனியார் முதலீட்டாளர்கள், சில்லறை முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனத்தில் இருக்கும் முதலீட்டாளர்கள், சீனாவில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் எனச் சங்கிலி தொடராகப் பெரிய பாதிப்பு உருவாகும்.

 ரிலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி

ரிலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி

100 கோடி 200 கோடி என்றால் பிரச்சனை இல்லை சமாளித்துவிடலாம் இது 305 பில்லியன் டாலர். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருக்கும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் மற்றும் ஹெச்டிஎப்சி குழுமம் இரண்டும் ஓரே நேரத்தில் திவால் ஆனால் எப்படி இருக்கும். இது தான் தற்போது சீனாவில் எவர்கிராண்டே நிறுவனத்தில் நடக்கிறது.

 டாப் 500 பணக்காரர்கள்

டாப் 500 பணக்காரர்கள்

எவர்கிராண்டே தாக்கத்தின் மூலம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஏற்பட்டு வர்த்தகப் பாதிப்பின் காரணமாக டாப் 500 பணக்காரர்கள் மட்டும் நேற்று ஒரு நாளில் 135 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இதில் அதிகமாக டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் 7.2 பில்லியன் டாலர், அமேசான் ஜெப் பைசோஸ் 5.6 பில்லியன் டாலர் வரையில் இழந்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் நேற்று ஆசிய சந்தை மொத்தமாகச் சரிந்துள்ளது, இன்று சரிவில் இருந்து தப்பித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+