தவிக்கும் சீன நிறுவனங்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா தான்.. இன்னும் என்னதான் ஆகுமோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: சீனாவுக்கு இது போறாத காலமே.. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகமெங்கும் பல நாடுகளில் பரவியுள்ளது.

 

சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறைந்திருந்தாலும், மற்ற நாடுகளில் கொரோனா பரவியுள்ளதால் அதன் தாக்கம் உலகெங்கிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது எனலாம்.

அது சீனாவினையும் விட்டு வைக்கவில்லை. பொதுவாக சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனா நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன

சீனா நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன

இது குறித்து வெளியான செய்தியில், சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான ஏற்றூமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாம். அதோடு புதிய ஆர்டர்கள் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சீனா ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளதாகவும் இடி செய்திகள் கூறியுள்ளது.

புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது

புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது

இந்த நெருக்கடியானது உலகளவில் அதன் வர்த்தக பங்காளிகளையும் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது மட்டும் அல்ல உள்நாட்டிலும் நுகர்வினை அதிகரிக்க தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் உச்சத்தில் இருந்து குறைந்துவிட்ட நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் மீண்டும் உயிர்பிக்க ஆரம்பித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் விற்க வேண்டிய கட்டாயம்
 

உள்நாட்டு சந்தையில் விற்க வேண்டிய கட்டாயம்

எனினும் கொரோனாவின் தாக்கத்தினால் உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீட்பு இப்போது தடைபட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வந்தாலும், தற்போது உள்நாட்டு சந்தையினை கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனினும் உ:ள்நாட்டு சந்தையிலும் முழு பொருட்களை விற்க முடியும் என்பது நிபுணர்களின் கேள்விக்குறியாக உள்ளது.

சீனா ஆதரவளிக்கும்

சீனா ஆதரவளிக்கும்

ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி வணிகங்களின் உள்நாட்டு விற்பனை 17 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவ்வாறு வெளிநாட்டு சந்தைகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்கள், உள்நாட்டு சந்தையில் வணிகங்களை மேம்படுத்தவும், அந்த வர்த்தக நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆதாரவளிப்பதாகவும் சீனாவின் வர்த்தக துறை அமைச்சர் ஒர் அறிக்கையில் கூறியுள்ளார்.

பாதியாக குறைந்த வருவாய்

பாதியாக குறைந்த வருவாய்

சீனாவின் மிகப்பெரிய பொம்மை தயாரிப்பாளரான சாண்டோ பெய்லிசியின் வருவாயில் கிட்டதட்ட பாதி வெளி நாட்டு விற்பனையால் கிடைப்பது. ஆனால் இது கொரோனா தாக்கத்திற்கு பின்பு வெறும் ஐந்து சதவீதமாக குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பொது மேலாளர் தனது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது முற்றிலும் முடங்கியுள்ளதாக கூறியுள்ளது.

ஏற்றுமதிக்கு பெருத்த அடி

ஏற்றுமதிக்கு பெருத்த அடி

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல நாடுகள் முழு லாக்டவுனினால் முடக்கப்பட்டுள்ளன. அப்படியே லாக்டவுனில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், லாகிஸ்டிக்ஸ் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஆக இது ஏற்றுமதி துறையில் பெருத்த அடியினைக் கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வேலையின்மையும் அதிகரித்து வருகிறது

வேலையின்மையும் அதிகரித்து வருகிறது

மேலும் இது இத்தோடு முடிந்த பாடாகவும் இல்லை. ஏனெனில் இதனால் உலகளவில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் வாங்கும் திறனும் குறைந்து வருகிறது. இதனால் தேவையும் குறைகிறது. நுகர்வும் குறைகிறது. தேவையே இருந்தாலும், மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகம் இல்லாத காரணத்தால் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் செலுத்துவதில்லை.

பொருளாதாரம் வீழ்ச்சி

பொருளாதாரம் வீழ்ச்சி

இதன் காரணமாக ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட சில ஆர்டர்கள் ரத்து செய்யப்படவும் ஆரம்பித்துள்ளன, இதனால் தான் நிறுவனங்கள் உள்நாட்டு விற்பனையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. எனினும் தற்போதைக்கு சீன நிறுவனங்கள் லாபம் பார்க்க ஆரம்பிக்க வில்லை எனலாம். இதனால் இந்த நாட்டில் பொருளாதாரம் 30 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது எனலாம்.

உற்பத்தி குறைப்பு & ஆர்டர்கள் இல்லை

உற்பத்தி குறைப்பு & ஆர்டர்கள் இல்லை

சீனாவின் உள்ள பிரபல சமயலறை பொருட்கள் தயாரிக்கும் முன்னனி நிறுவனமான கோ பங்க், கொரோனாவுக்கு முந்தைய உற்பத்தியில் தற்போது 30 - 50% மட்டுமே உற்பத்தி செய்வதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து, ஏப்ரல் மாதம் வரையிலும் புதிய ஆர்டர்கள் எதுவும் இல்லை எனவும், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிம் என்ஜி தெரிவித்துள்ளார்.

வர்த்தக கண்காட்சி

வர்த்தக கண்காட்சி

கிம் என்ஜி, இவர்களின் முக்கிய ஏற்றுமதி சந்தையான அமெரிக்காவில் இருந்து ஆர்டர்கள் இனி மேலும் வீழ்ச்சியடையும் என்றும் அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உள்நாட்டில் விற்பனையை அதிகரிக்க, சீனாவில் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் அவரது விற்பனையை அதிகரிக்க முடியும் என்றும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் சில நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆக இப்படியாக பல சீன நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மொத்த வாடிக்கையாளரான அமெரிக்காவும் கை விரிக்கும் நிலையில் என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China export companies face many problems amid coronavirus pandemic

China companies face many problems amid coronavirus pandemic, cancelled shipments, returned goods and low new orders.
Story first published: Sunday, May 24, 2020, 18:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X